உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டாயப்படுத்தி கையெழுத்து அமைச்சர் மகேஷ் எச்சரிக்கை

கட்டாயப்படுத்தி கையெழுத்து அமைச்சர் மகேஷ் எச்சரிக்கை

திருவள்ளூர்:''மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினால், அவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஸ் தெரிவித்தார்.திருவள்ளூரில் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தை பொறுத்தவரை, இரு மொழிக் கொள்கையே போதுமானது. அறிவு சார்ந்து, அறிவியல் சார்ந்து பேச வேண்டிய காலம் இது. உலகத் தரத்திற்கு குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டிய காலம். மத்திய அரசு 2,000 கோடி ரூபாய் கொடுப்பதற்காக, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால், 2,000 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கும்.அந்த நிலை வேண்டாம் என, முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பள்ளி வாயிலில் 'போர்டு' வைத்து, குழந்தைகளை அழைத்து கையெழுத்து போடுமாறு வற்புறுத்துவதை கண்டிக்கிறேன். எல்லா வகையிலும் பா.ஜ., அரசு, 'பிளாக்மெயில்' செய்து வருவதை, நிறுத்த வேண்டும். மும்மொழிக் கொள்கையை கட்டாயப்படுத்தி கையெழுத்து கேட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை