மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago
சென்னை:தர்மபுரி எம்.எல்.ஏ., வெங்கடேசன், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் ஆகியோர், நேற்று தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:எம்.எல்.ஏ., வெங்கடேசன்பருவமழை பொய்த்து விட்டதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் 1,000 அடிக்கு கீழ் சென்று விட்டதால், குடிநீருக்கும், மற்ற பயன்பாட்டிற்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்கும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.எனவே, குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு, வாகனங்களில் குடிநீர் வழங்க வேண்டும் என, மனு அளித்தோம். தேர்தல் கமிஷன் அனுமதி பெற்று நடவடிக்கை எடுப்பதாக, தலைமை செயலர் தெரிவித்தார்.தர்மபுரியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. ஒகேனக்கல் குடிநீர், 50 சதவீதம் கூட கிடைப்பதில்லை. எனவே, உடனடியாக குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.எம்.எல்.ஏ., சதாசிவம் ஓட்டு எண்ண இன்னும், 38 நாட்கள் உள்ளன. மக்களுக்கு அடிப்படை பணி செய்ய முடியவில்லை. உச்சி வெயில் தலையை பிளக்கிறது.தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, வாகனங்களில் மக்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியவில்லை. எனவே, தலைமை தேர்தல் அதிகாரி, தலைமை செயலர் ஆகியோரை சந்தித்து மனு அளித்தோம்.மக்கள் வெயிலால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு சேவை செய்யுங்கள் என ராமதாஸ், அன்புமணி ஆகியோர் கூறியுள்ளனர். எம்.பி., அலுவலகம், எம்.எல்.ஏ., அலுவலகம் தமிழகத்தில் மட்டுமே உள்ளது.எம்.எல்.ஏ., நிதியை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும்படி, அரசு கோரினால் பரிந்துரை செய்யப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.சேலம் மாவட்டத்தில், மேட்டூர் அணையில், 50 அடி தண்ணீர் தான் உள்ளது. எங்கள் சொந்த பணத்தில் லாரியில் தண்ணீர் வழங்க அனுமதி கோருகிறோம்.தேர்தல் விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று கேட்டு உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
2 hour(s) ago | 3
13 hour(s) ago | 1
14 hour(s) ago