| ADDED : ஏப் 02, 2024 02:36 AM
கோவை,: ''மூன்றாவது முறையாக பிரதமராக மோடி அமர்வது நிச்சயம். அப்போது அரசியல் காரணங்களுக்காக, 70 ஆண்டுகளாக எடுக்காத முடிவுகளை அவர் எடுப்பார்,'' என, பா.ஜ., மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்தார்.கோவையில் நேற்று பல பகுதிகளில் அண்ணாமலை பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது:மூன்றாவது முறையாக மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. தேர்ந்தெடுக்கப்பட்ட பின், கடந்த 70 ஆண்டுகளாக அரசியல் காரணங்களுக்காக, எடுக்கப்படாத முக்கிய முடிவுகளை மோடி எடுப்பார். கடந்த 33 மாதங்களாக, தி.மு.க.,வை விமர்சிக்காத நாளில்லை. இனிமேல் பேசினால் மட்டும் அவர்கள் திருந்தி விடப் போகின்றனரா என்ன? தி.மு.க., ஆட்சிக்கு நெகட்டிவ் மதிப்பெண் தான் கொடுக்க முடியும். எனது வண்டி நிச்சயம் டில்லி செல்லும். பிரதமர் மோடியின் கண்களாக நான் செயல்படுவேன். இவ்வாறு அவர் பேசினார்.
'மதுக்கடையை மூடணும்
கள் இறக்க வேண்டும்'↓ ↓பிரசாரத்தின்போது அண்ணாமலை பேசுகையில், “தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வேண்டும். கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும். அடுத்த முறை சட்டசபை தேர்தலில், அதற்கான வாய்ப்பை நீங்கள் அளிப்பீர்கள் என நம்புகிறோம்,” என்றோம்.↓ ↓வீரகேரளத்தில் பிரசாரம் செய்யும்போது, அண்ணாமலைக்கு குரும்பா சமூகத்தினர் கம்பளி பரிசாகக் கொடுத்தனர். அதை ஏற்றுக் கொண்ட அண்ணாமலை, அவர்களிடம் கன்னடத்தில் பேசி ஓட்டு சேகரித்தார்.-------