உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காஷ்மீர் முதல் குமரி வரை மோடி அலை

காஷ்மீர் முதல் குமரி வரை மோடி அலை

காரைக்குடி:காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பிரதமர் மோடி அலை வீசுகிறது என தமிழக பா.ஜ., மேலிட இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.காரைக்குடியில் அவர் கூறியதாவது:பிரதமர் மோடியின் சாதனைகளை சிவகங்கை மக்களும் நினைவில் கொண்டுள்ளனர். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நிலவும் குடும்ப அரசியலை அழிப்பதற்கு மோடி போராடி வருகிறார். கச்சத்தீவு குறித்த தகவல் தற்போது வெளிவந்து மக்கள் அனைவரும் அறிந்துள்ளனர்.பா.ஜ.,வினருக்கு தேசியம் தான் முதலானது. அடுத்தது கட்சி. கடைசியில் தான் குடும்பம். மோடி ஆட்சியில் 100க்கும் மேற்பட்ட சிறந்த திட்டங்களை நான் கூற முடியும். அதற்கு உதாரணம் ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசி, 12 கோடி மக்களுக்கு காஸ் இணைப்பு, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவச சிகிச்சை உள்ளிட்டவையாகும். நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பிரதமர் மோடி அலை வீசுகிறது. சிவகங்கை காங்., வேட்பாளர் விடுமுறைக்கு வரக்கூடிய எம்.பி., பா.ஜ., வேட்பாளர் தேவநாதன் இத் தொகுதி முழுநேர எம்.பி., யாக இருப்பார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை