உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றவர் மோடி: ராஜ்நாத் சிங் பாராட்டு

நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றவர் மோடி: ராஜ்நாத் சிங் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கிருஷ்ணகிரி: 'காங்கிரசால் சீர்குலைந்திருந்த பொருளாதாரத்தை சீர்படுத்தி, நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றவர் பிரதமர் மோடி' என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் கூறினார். கிருஷ்ணகிரி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஆலயங்களின் மாநிலமான தமிழகம் வரும் போது மனம் அமைதி கொள்கிறது. பார்லிமென்டில் செங்கோல் வைத்ததன் மூலம் தமிழ் கலாசாரம் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.

செங்கோல்

தமிழகம் என்று பேசப்படும் போது நம் நினைவுக்கு வருவது செங்கோல் தான். இன்டர்நெட்டில் ஏற்பட்ட புரட்சியால் யூபிஐ சேவை தற்போது அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டுக்கு பிறகு மருத்துவ வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. நாடு முழுவதும் புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.

தமிழ் மொழி

பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் முதல் 25 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. ஐக்கிய நாடுகள் அவையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக் கூறி தமிழின் பெருமையை மோடி உயர்த்தியுள்ளார். நாடு முழுவதும் தமிழ் மொழியை கொண்டு செல்ல பிரதமர் மோடி பாடுபடுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

கனோஜ் ஆங்ரே
ஏப் 16, 2024 19:52

“நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே?” ஆம் புலிகேசி வடிவேல்?


T.sthivinayagam
ஏப் 16, 2024 19:06

நாட்டை வளர்ப்போம் வளர்ப்போம் என்று சொல்லி சொல்லி கடைசியில் கட்சியையும் கார்ப்ரேட்டையும் வளர்த்து விட்டீர்களே என மக்கள் கேட்கின்றனர்


P. VENKATESH RAJA
ஏப் 16, 2024 19:04

தமிழ்மொழி வளர்ச்சிக்கு பிரதமர் மோடி அரும்பாடுபட்டு வருகிறார்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ