உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜல்ஜீவன் திட்டத்தில் நீரின் தரம் சோதனை அடிப்படையில் கண்காணிப்பு

ஜல்ஜீவன் திட்டத்தில் நீரின் தரம் சோதனை அடிப்படையில் கண்காணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படும் நீரின் தரம் மற்றும் அளவு, சோதனை அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில், 12,525 ஊராட்சிகளில், பல்வேறு குக்கிராமங்கள் உள்ளன. ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், தனி குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை, 2019 முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

பல்வேறு பாதிப்பு

இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள, 80 சதவீத ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. தமிழக குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில், இந்த ஊராட்சிகளில் உள்ள நிலத்தடி நீரை பயன்படுத்திய மக்கள், 'புளோரைடு, நைட்ரேட், சல்பேட், காரத்தன்மை, பாக்டீரியா' உள்ளிட்டவற்றால், பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வந்தனர். இதுபோன்ற பாதிப்புகள் தொடர்ந்து ஏற்படாத வகையில் கண்காணிக்க, மத்திய ஜல்சக்தி துறை உத்தரவிட்டு உள்ளது.இதையடுத்து, நீரின் தரத்தை தொடர்ந்து பரிசோதனை செய்ய, மகளிர் குழுவை சேர்ந்த, 62,625 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் வாயிலாக, நீரின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்க, மாநில ஜல்சக்தி மிஷன் திட்ட இயக்குனர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டு உள்ளார். மேலும், ஜல்சக்தி மிஷன் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் மோட்டார்களில் மின் சிக்கனம் மற்றும் குடிநீர் வீணாவதை தடுப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தானியங்கி கருவி அதன்படி, சோதனை அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் மருதுார், மேல்கதிர்பூர், திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம், மல்லியன்குப்பம், ஈரோடு மாவட்டம் கதிரம்பட்டி, கோவை மாவட்டம் அரசூர் ஆகிய இடங்களில், தானியங்கி கண்காணிப்பு கருவிகள் நிறுவப்பட்டு உள்ளன. இதை மேலும் பல ஊராட்சிகளுக்கு விரிவுப்படுத்தவும் ஆலோசனை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஜூலை 27, 2024 06:55

கடைக்கோடியில் இருப்பவனுக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்கவேண்டும் என்று மோடி பணத்தை தண்ணீராக செலவு செய்து இது போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறார். மாநில அரசு அதையெல்லாம் ஒரு திட்டமாகவே எடுத்துக்கொள்ளவில்லை. சீமை சாராயம் விற்று எப்படி மக்களை சுடுகாட்டுக்கு விரைவாக அனுப்பலாம் என்றுதான் திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை