உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்வி மேம்பாடு குறித்து மாதந்தோறும் ஆய்வு

கல்வி மேம்பாடு குறித்து மாதந்தோறும் ஆய்வு

கல்வியில் விரிவான சீர்திருத்தங்களை செய்து, அதன் வழியே சமூக மேம்பாட்டை உயர்த்தவும், மாவட்டத்துக்குள் கல்வி முறையை மேம்படுத்தவும், புதிதாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி, மாவட்ட அளவில் கல்வியின் தரத்தை மேம்படுத்த, கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு சார்பில், மாதந்தோறும் கல்வித்துறை ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தில், பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி தொடர்பான சேவைகள், போக்குவரத்து, சத்துணவு திட்டங்கள், சுகாதார சேவைகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகளை, உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித் துறை மற்றும் தொடர்புள்ள துறைகளுடன் இணைந்து மேம்படுத்த வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கற்பித்தல் முறை, மாணவர்களின் செயல் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவது, கூட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.மாணவர் சேர்க்கை, வருகை கண்காணிப்பு ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆய்வுக் கூட்டங்கள் வாயிலாக, கல்வி முறை மற்றும் அதன் தர மேம்பாட்டை உறுதி செய்ய வேண்டும்.- சிவ்தாஸ் மீனா,தமிழக அரசின் தலைமை செயலர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை