உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மலை ரயில் உருவாக காரணமான மோரான்ட்

மலை ரயில் உருவாக காரணமான மோரான்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குன்னுார் : நீலகிரி மலை ரயிலின், 125ம் ஆண்டு விழா இன்று கொண்டாடும் நிலையில், இதற்கு காரணமான, ஆங்கிலேயர் மோரான்ட் என்பவரை மலை மாவட்ட மக்கள் நினைவு கூர வேண்டும். நீலகிரி மலை ரயில் சேவை, 1899ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுாருக்கு துவங்கியது. இன்று, 125வது ஆண்டு விழா கொண்டாடும் நிலையில், இந்த மலை ரயில் உருவாக்க காரணமாக இருந்த பிரிட்டீஷ் மேற்பார்வை பொறியாளர் ஜே.எல்.எல். மோரன்ட் என்பவரை நினைவு கூர ரயில்வே நிர்வாகம் கடமைப்பட்டுள்ளது.

நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் தர்மலிங்கம் வேணுகோபால் கூறியதாவது:

நீலகிரி மலை ரயில் உருவாக்குவதற்கு முக்கிய காரணம் பிரிட்டிஷ் மேற்பார்வை பொறியாளர் ஜே.எல்.எல்., மோரன்ட் என்பவராவார். உலகம் முழுவதும் ரயில் இயங்க காரணமான ரிகன் பாக் என்பவரை நீலகிரிக்கு அழைத்து வந்து அதற்கான பணிகளை துவக்கினார்.

போதிய நிதி இல்லாமலும், நிர்வாகத்தின் போதிய ஒத்துழைப்பு இல்லாமலும் பணியில் தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு இவரின் உதவியாளர் ரோமன் அப்ட் என்பவரின் மூலம் பணிகள் நடந்தது. 1886ம் ஆண்டு ஜூன், 17ம் தேதி ஆஸ்திரேலியாவில் ஒரு நோயினால் மோரன்ட் இறந்தார். 1899ம் ஆண்டில் அவரின் கனவு நினைவாகும்போது மோரன்ட் உயிருடன் இல்லை. குன்னுாரில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயம்; வெலிங்டன் தேவாலயம்; கூடலுார் புரோட்டஸ்டன்ட் தேவாலயம்; லாரன்ஸ் மற்றும் பிரீக்ஸ் பள்ளிகள்; ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நுழைவாயில் கட்டடம் ஆகியவை மோரன்ட்டால் கட்டப்பட்ட கட்டடங்களாகும். இத்தகைய சிறப்பு பெற்ற இவரின் புகைப்படம் எங்கும் கிடைக்கவில்லை. எனினும், மலை ரயில், 125ம் ஆண்டு விழாவில் இவரை நினைவு கூர அனைவரும் கடமைப்பட்டுள்ளோம், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rpalnivelu
ஜூன் 15, 2024 07:20

இந்த ரயிலு என்றாலே ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது


Kasimani Baskaran
ஜூன் 15, 2024 06:57

இதெல்லாம் திராவிடர்களுக்கு தெரிந்தும் கூட ஸ்டிக்கர் ஒட்டாமல் விட்டதுதான் அவர்களின் நற்பண்புக்கு நல்ல உதாரணம்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ