உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய தலைமை செயலாளராக முருகானந்தம்; தமிழக அரசு நியமனம்

புதிய தலைமை செயலாளராக முருகானந்தம்; தமிழக அரசு நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அரசின் புதிய தலைமை செயலராக, முதல்வரின் செயலராக உள்ள முருகானந்தம் நியமிக்கப்பட்டார். தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழக அரசின், 49வது தலைமை செயலராக சிவ்தாஸ் மீனா, கடந்த ஆண்டு ஜூன் 30ல் பொறுப்பேற்றார். சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த, கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்று நன்றி உரையாற்றினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1e330o64&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சிவ்தாஸ் மீனாவுக்கு புதிய பொறுப்பு

விழா முடிந்த சில மணி நேரத்தில் அவர், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமிக்கப்படுவதாக அரசாணை வெளியானது. இவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இன்ஜியரிங் பட்டதாரி; 1989ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றார். பல்வேறு பதவிகளை வகித்த சிவ்தாஸ் மீனாவின் பதவி காலம் வரும் அக்டோபரில் நிறைவடைய உள்ளது.

நியமனம்

இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 19) புதிய தலைமை செயலராக, முதல்வரின் செயலராக உள்ள முருகானந்தம் நியமிக்கப்பட்டார். * இவர் முதல்வரின் முதன்மை செயலராக இருந்துள்ளார். முருகானந்தம் ஐ.ஏ.எஸ்., 1991 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி.* இவர் முதுநிலை கணினி அறிவியல் பட்டதாரி; ஐ.ஐ.எம்., லக்னோவில் எம்.பி.ஏ., படித்துள்ளார்.* பல்வேறு துறைகளில் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் முருகானந்தத்திற்கு உள்ளது.* பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக இருந்த போது, அவருக்கு கீழ் முகானந்தம் செயலாளராக பணியாற்றினார். இவர் கோவை மாவட்ட கலெக்டராகவும் இருந்தவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Anand
ஆக 19, 2024 15:35

அல்லு...


Ram pollachi
ஆக 19, 2024 12:37

இந்த பெயரை கேட்டவுடன் காளப்பட்டி சம்பவம் நினைவுக்கு வந்தது.


ஆரூர் ரங்
ஆக 19, 2024 12:32

தீயமுக சாதிப் பின்புலம் விசாரிக்காமல் பெரிய பதவிகளைத் தருவதில்லை.


duruvasar
ஆக 19, 2024 11:59

சினிமா பட வில்லன் தோற்றம் தெரிகிறது .


அப்பாவி
ஆக 19, 2024 11:11

அதிரடியா மாசம் அம்பது அம்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கெத்து காட்டுங்கள். மத்தபடி எதுவும் நடப்பதாக தெரியலை. மீனா தப்பிச்சுட்டாரு. வர மழை சீசனில் தெருத்தெருவாக போய் நிக்க வாணாம்.


rasaa
ஆக 19, 2024 12:18

மிக மிக சரி. தப்பித்தார் மீனா


Punniyakoti
ஆக 19, 2024 10:16

பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி