என் பாவம் சும்மா விடாது: சீமானுக்கு விஜயலட்சுமி சாபம்
சென்னை: “நான் பாலியல் தொழிலாளியா சீமான்... என் பவாம் உங்களை சும்மா விடாது,” என, நடிகை விஜயலட்சுமி தெரிவித்து உள்ளார்.நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி அளித்த திருமண மோசடி, பாலியல் வன்கொடுமை புகார் குறித்து, சென்னை வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பேசும்போது, “நான் பாலியல் குற்றவாளி என என்னை விமர்சிக்கின்றனர். வழக்கு விசாரணையில் இருக்கும்போது, சட்டம் தெரியாமல் என்னை பாலியல் குற்றவாளி என சொல்வது தவறு. என் மீது புகார் அளித்துள்ள நடிகை வியஜலட்சுமி, ஒரு பாலியல் தொழிலாளி; அதற்கு என்னிடத்தில் ஆதாரம் உள்ளது,” என்றார்.அவருக்கு பதில் அளிக்கும் விதமாக, விஜயலட்சுமி நேற்று கண்ணீருடன் பேசி, 'வீடியோ' ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் பாலியல் தொழிலாளியா சீமான்... அப்படியானால், உடல்நலன் பாதிக்கப்பட்ட என் அக்காவை பெங்களூரில் வைத்துக்கொண்டு எதற்காக கஷ்டப்படுகிறேன்? என் பாவம் ஒருபோதும் உங்களை சும்மா விடாது,” எனக் கூறியுள்ளார்.