உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.எஸ்., தமிழக பிரிவு தலைவரின் கூட்டாளிகளை பிடிக்க என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடுதல் வேட்டை

ஐ.எஸ்., தமிழக பிரிவு தலைவரின் கூட்டாளிகளை பிடிக்க என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடுதல் வேட்டை

சென்னை : ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தமிழக பிரிவு தலைவர் அல்பாசித்தின் கூட்டாளிகளை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

வாக்குமூலம்

மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்தவர் அல்பாசித்,42. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின், தமிழக பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தார். சென்னை புரசைவாக்கத்தில் தங்கி, தனியார் நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள், கடந்த ஜனவரியில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.பின்னர் அவரை, ஏழு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, தங்களின் சதி திட்டம் மற்றும் தன் கூட்டாளிகள் பற்றி வாக்குமூலம் அளித்துஉள்ளார். அதன் அடிப்படையில், அல்பாசித் கூட்டாளிகளை தேடும் பணியில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:அல்பாசித், மயிலாடுதுறை மாவட்டம் தேரெழுந்துார், வடகரை; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருமங்கலக்குடி, மேலக்காவேரி, கருப்பூர் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று, அங்குள்ள முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்துள்ளார்.

தேடுதல் வேட்டை

பி.எப்.ஐ., எனப்படும், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதால், அதன் நிர்வாகிகளை ஐ.எஸ்., அமைப்பில் சேர்க்கவும் முயற்சித்துள்ளார். சிலரை கூட்டாளிகளாக சேர்த்து, சதி திட்டத்தில் ஈடுபடுத்த, ரகசிய கூட்டம் நடத்தி உள்ளார். பயங்கரவாதிகள் இக்காமா சாதிக் பாட்ஷா, ஹாஜா பக்ருதீன் ஆகியோர், அல்பாசித்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. அல்பாசித் கைதுக்கு பின் தலைமறைவான, அவரது கூட்டாளிகள், தற்போது, தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதியில் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை