உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குண்டு வெடிப்பு வழக்கு மூவருக்கு என்.ஐ.ஏ., வலை

குண்டு வெடிப்பு வழக்கு மூவருக்கு என்.ஐ.ஏ., வலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெங்களூரு ஹோட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுடன் உள்ள தொடர்பு குறித்து, விசாரணைக்கு ஆஜராகாத நபர்களை கைது செய்ய, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வருகின்றனர்.கர்நாடக மாநிலம் பெங்களூரில், ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, அம்மாநிலத்தை சேர்ந்த முஸவீர் ஷுசைன் ஷாகிப், அப்துல் மதீன் அகமது தாஹா ஆகியோரை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் தேடி வருகின்றனர்.இவர்களின் கூட்டாளி முஸாமில் ஷெரீப்பை கைது செய்தனர். குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக, கர்நாடகாவில், 12, தமிழகத்தில் 5, உ.பி.,யில் ஒன்று என, 18 இடங்களில் சோதனை நடத்தி, மொபைல் போன் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.இவற்றை ஆய்வு செய்த போது, குற்றவாளிகள், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப் பகுதியில் ரகசிய கூட்டங்கள் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள என்.ஐ.ஏ., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த லியாகத் அலி உட்பட மூவருக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாமல் மூவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்து விசாரிக்க, என்.ஐ.ஏ., தனிப்படை அதிகாரிகள், ராமநாதபுரத்தில் முகாமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Lion Drsekar
ஏப் 02, 2024 13:47

அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை, தேடுகிறார்கள், கைது என்ற செய்தி வந்தாலும் அவர்களை எப்படி காவலர்கள் அணுகுகிறார்கள் என்று மனசாட்சியுடன், நேர்மையாக செயல்படும் காவலர்களுடன் நேரில் சென்று அவர்களது நடவடிக்கையை கவனித்தால் எல்லா உண்மையும் தெரியவரும், நாம் நினைப்பது போல் அவர்கள் வீட்டுக்கு இரவு நேரத்தில் சென்று தூங்கிக்கொண்டு இருப்பவரை அடித்து இழுத்து செல்வது கிடையாது செய்திவேண்டுமானால் அப்படி வரலாம் அவரால் இரவு , நள்ளிரவில் கைது என்று? ஆனால் உண்மை தவறான செயல்களில் ஈடுபடும் நபர்களின் வீட்டுக்கு காவல் துறை தவறு செய்யும் சமூக விரோதிகளின் அனுபவத்துக்கு ஏற்ப அதிகாரிகள் நேரில் சென்று குடும்ப உறுப்பினர்களிடம் , சிரித்து பேசி, கெஞ்சி, வேண்டிக்கொண்டு , இது போல் கைது செய்யவேண்டும் நாங்கள் வரும்போது அவரை அல்ல, மாண்புமிகுவை அழைத்து வருவது போல் அழைத்து செல்வதுதான் உண்மை அந்த அளவுக்கு இன்று சமூக விரோதிகளுக்கு சமுதாயத்தில் வேண்டுமானால் மதிப்பு இல்லாமல் இருக்கலாம் ஆனால் பல நிலைகளில் அவர்கள்தான் இன்று எல்லாவற்றையும் தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறார்கள், இதுதான் உண்மைஇது குடுவைத்தாலும் சரி, கொலை மற்றும் வழிப்பறி, கொள்ளை என்று எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் முழுநேர தொழிலாக செய்யும் மாண்புமிகு சமூக விரோதிகளுக்கு அரசு மற்றும் அல்ல அனைத்து௮ துறைகளும் பயந்து கைகட்டி வாழ்கிறது இதுதான் உண்மை வந்தே மாதரம்


Kumar Kumzi
ஏப் 02, 2024 12:12

Gopalapuram room eduthu thangi iruppanunga


Kasimani Baskaran
ஏப் 02, 2024 05:38

தேர்தல் நேரத்தில் எப்படி இது போல தேடலாம் இது தீம்காவை பாதிக்காதா? நீதிமன்றம் தலையிட்டு விசாரணையை தேர்தல் முடிவுக்குப்பின் தள்ளிப்போட வேண்டும் - உபிஸ்


Palanisamy Sekar
ஏப் 02, 2024 04:41

முதலில் என் ஐ ஏ அதிகாரிகள் ஒன்றை மிக தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் இதுபோன்ற குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விசாரிக்க சம்மன் போன்றவற்றை அனுப்பக்கூடாது நிச்சயம் அவர்களுக்கு இதில் சம்பந்தம் இருப்பதாக அவர்களுக்கு தெரிந்தால் விசாரணைக்கு வராமல் இப்படி தலைமறைவாகத்தான் செய்வார்கள் அதற்கு அந்த அமைப்பினர் தப்பிக்க எல்லாவகையான ஆலோசனைகளையும் அவர்களுக்கு ஆதரவாக வக்கீல் கும்பலையும் ஏற்படு செய்வார்கள் அதனால் இவர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது என்பது மிக மிக தவறான நடைமுரையாகும் நேரடியாக அதிரடியாக கைதுசெய்து விசாரிக்க வேண்டும் தொடர்பு இல்லாதபட்சத்தில் அவர்களை வெளியே செல்ல அனுமதிக்கலாம் இல்லையேல் இவர்களை தேடுவதிலேயே காலம் கடந்துவிடும் ரொம்ப நல்லவங்களா இருக்கீங்களே ஆபீஸர்ஸ்


மேலும் செய்திகள்