சென்னை: 'தமிழகத்தில் வரும், 6ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை. அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகம், புதுச்சேரியில் வரும், 6ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை. பெரும்பாலான இடங்களில், மிதமான மழை பெய்யலாம். இன்று முதல், 4ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 4 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகும்.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், அதிகபட்ச வெப்பநிலை, 34 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும். மாலை நேரங்களில் திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் ஒரு வாரமாக வீசிய சூறாவளி காற்று, பெரும்பாலான பகுதிகளில் நின்று விட்டது. வடக்கு ஆந்திர கடலோரம், தென் கிழக்கு, மத்திய, வடக்கு வங்கக்கடல் பகுதிகளில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, பந்தலுாரில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.