உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல் மட்டுமல்ல; கள்ளையும் அனுப்பலாமே! விவசாயி கேள்வியால் அமைச்சர் அதிர்ச்சி

கல் மட்டுமல்ல; கள்ளையும் அனுப்பலாமே! விவசாயி கேள்வியால் அமைச்சர் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பொள்ளாச்சி: 'தமிழகத்தில் இருந்து கல், ஜல்லி போன்ற கனிம வளங்களை மட்டும் தான் கேரளாவுக்கு அனுப்ப வேண்டுமா; தென்னை மரத்தில் இருந்து கள் இறக்க அனுமதி வழங்கி அதையும் கேரளாவுக்கு அனுப்பலாமே...' என, விவசாயி கூறியதைக் கேட்ட அமைச்சர் அதிர்ந்து போனார்.கோவை மாவட்டம், ஆனைமலை அருகே, சூறாவளிக் காற்றால் சேதமடைந்த வாழை மரங்களை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் முத்துசாமி நேற்று பார்வையிட்டார். அப்போது, வேட்டைக்காரன்புதுாரைச் சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியம், அமைச்சரை வழிமறித்து, கள் இறக்க அனுமதி கோரினார்.அப்போது அவர், 'தென்னை மரத்தில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் கள் விற்பனை செய்ய அனுமதிக்கா விட்டாலும், கேரளாவுக்கு அனுப்ப அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து ஜல்லி, கல், 'எம்-சாண்ட்' போன்ற கனிம வளங்களை கேரளாவுக்கு அனுப்பும் போது, தென்னைமர கள்ளை ஏன் அனுப்பக் கூடாது.'கள் இறக்கி, கேரளாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், விவசாயிகள் பயன் அடைவர். இல்லாவிட்டால், கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் விவசாயிகள், நிலத்தை விற்று விட்டு, கேரளாவுக்கு தான் செல்ல வேண்டும். இதுகுறித்து, பலமுறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை' என்றார்.'கல் அனுப்பலாம்; கள் அனுப்பக் கூடாதா...' என்ற விவசாயியின் கேள்வி, அமைச்சரை சற்று அதிர வைத்தது. சுதாரித்து பதிலளித்த அமைச்சர், ''இது அரசின் கொள்கை முடிவு தொடர்பானது. தொடர்ச்சியாக விவாதித்து வருகிறோம். உரிய முடிவு எடுத்து அறிவிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

S. Kalaiselvan
மே 19, 2024 17:35

இவங்க எப்ப நல்லது செஞ்சி இருக்காங்க


S.jayaram
மே 16, 2024 19:20

நல்ல கேள்விதான் ஆனால் அதில் அரசுக்கோ, மற்றவர்களுக்கு வருமாணம் கிடைத்தால் அந்த லட்சம் கோடி கடனை கட்டலாம் அல்லவா?


ஆரூர் ரங்
மே 16, 2024 15:09

பாட்டிலுக்கு பத்து கொடுக்க தயார்ன்னா கேரளாவுக்கு அனுப்ப 21க்கு ஆட்சேபணையில்லை?


ஆரூர் ரங்
மே 16, 2024 15:07

ஆமா. இது முன்னேறிய மாநிலம். . இங்கு அயலக சாதிக் தயாரிப்பு மெத் துக்குத்தான் கிராக்கி. கள் குடிக்க ஆளில்லை. ஏழை விவசாயிகள் கள்ளை கேரளாவுக்குத்தான் அனுப்ப முடியும்.


Kanagaraj M
மே 16, 2024 12:10

நாம் விவரமாக பேசி என்ன பயன்விவரம் இல்லாத ஆட்களிடம் அரசாங்கத்தை ஒப்படைத்துவிட்டோமே


மருதையன்
மே 16, 2024 11:56

விவரமில்லாத விவசாயி... கனிமவளங்களை ஒரு ரெண்டு மூணு எடத்துல வளைச்சுப் போட்டு வெட்டி எடுத்து கள்ளத்தனமா வித்து காசு பாக்கலாம். தென்னங்கள்ளுன்னா அப்புடி.முடியாதே.


Varadarajan Nagarajan
மே 16, 2024 11:08

கர்நாடகாவிலிருந்து காவிரி நீர், கேரளாவிலிருந்து முல்லைப்பெரியாறு நீர் போன்றவற்றை தமிழகத்திற்கு தர மறுத்தாலும் நாம் இங்கிருந்து ஆற்றுமணல், ஜல்லி போன்றவற்றை பெரியமனத்துடன் தாராளமாக அனுப்பிக் கொண்டுள்ளோம் திருச்சி துவாக்குடி பகுதிகளில் இருந்த மலைகளை உடைத்து காணடித்தாயிற்று மதுரை மேலூர் மற்றும் கீழவளவு பகுதிகளில் பல மலைகளை காணடித்தாயிற்று தற்பொழுது கரூர் பகுதிகளில் உள்ளவற்றை கபளீகரம் செய்துகொண்டுள்ளோம் மழை மேகங்கள் மலை முகடுகளில் மோதி மழைபெய்விக்கும் என அனைவருக்கும் தெரியும் மலையே இல்லாதபோது பிறகு எப்படி மழைபெய்யும்?


sri
மே 16, 2024 10:25

இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதும் கடத்துவதும் அரசின் கொள்கை முடிவு நல்லா வருவீங்க. கள் இறக்க எத்தனை IAS வைத்து ஆலோசனை பண்ணுவீங்க.


angbu ganesh
மே 16, 2024 10:02

தீமுக்குமாவில் இருக்கும் ஏம்லே-க்கள் எல்லாம் தன்னிச்சையா செயல் பட்டு இது தொடர்பு முதல்வரிடம் பேசி உடனடி தீர்வு அண்ணனும், டாஸ்மாக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் இதற்கும் கொடுக்கலாமே


veeramani
மே 16, 2024 09:43

தமிழக பொள்ளாச்சி விவசாயி கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது தற்போதைய அரசு கனிமவளங்களை எல்லாம், நெல், காய்கறி, முட்டை, கோழி, மாடு போன்றவற்றை கேரளாவிற்கு அனுப்பும் போது தென்னைமர கல் ஏன் அனுப்பக்கூடாது இல்லாவிட்டால், தென்னைமர பதநீர் பாட்டல்களில் அடைத்து விற்பதற்கு அனுமதி தரலாம்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ