உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டாவில் திட்டமிட்டு பிழை, அதிகாரிகள் விஷமத்தனம்; வீடு, மனை வாங்கியோர் அவதி

பட்டாவில் திட்டமிட்டு பிழை, அதிகாரிகள் விஷமத்தனம்; வீடு, மனை வாங்கியோர் அவதி

சென்னை : நிலங்களுக்கு, 'ஆன்லைன்' முறையில் வழங்கப்படும் பட்டாக்களில், அதிகாரிகள் திட்டமிட்டு ஏற்படுத்தும் பிழைகளால், வீடு, மனை வாங்கியோர் அவதிப்படுகின்றனர். வீடு, மனை வாங்குவோர், அதற்கான பத்திரப்பதிவுக்கு பின், பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இதற்காக, தாலுகா அலுவலகங்களுக்கு மக்கள் அலைவதை தடுக்க, வருவாய் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, ஒரு சர்வே எண்ணுக்கு உட்பட்ட முழு சொத்தும் கைமாறும் நிலையில், பத்திரப்பதிவு நிலையிலேயே தானியங்கி முறையில், பட்டா மாறுதல் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, சார் - பதிவாளர் அடையாள சான்றுகளை சரிபார்த்தால் போதும். அதன் அடிப்படையில், பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, புதிய உரிமையாளர் பெயரில் பட்டா, 'ஆன்லைன்' முறையில் கிடைத்துவிடும். இந்த பட்டாவில் பெயர், மனை அளவு போன்ற விஷயங்களில், சிறு பிழைகள் காணபடுகின்றன. இதுகுறித்து, தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது: அனைத்து ஆவணங்களையும் முழுமையாக சரிபார்த்த பின் வழங்கப்படும் பட்டாக்களில், சிறு பிழைகள் காணப்படுகின்றன. வருவாய் துறையில் உள்ள அதிகாரிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு, இதுபோன்ற பிழைகளை ஏற்படுத்துகின்றனர். அப்போது தான் அதை சரிசெய்ய, மக்கள் தங்களை தேடி வருவர் என்ற நோக்கத்தில், இவ்வாறு செய்கின்றனர். இதைச் சரி செய்ய விண்ணப்பிக்க முன்வரும் போதும் அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். இதில், உயரதிகாரிகளை சந்திப்பதற்கு கூட, பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால், வீடு மனை வாங்கியவர்கள், புதிய கட்டட அனுமதி, வங்கிக்கடன் பெற முடியாமல் தவிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பட்டாக்களில் காணப்படும் எழுத்து பிழைகளை சரிசெய்ய, விண்ணப்பங்கள் அதிகமாக வருகின்றன. வழக்கமான பணிகளுடன் சேர்ந்து, இதன் மீது நடவடிக்கை எடுப்பதில், சில பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

ARUMUGHAM
மார் 02, 2025 15:27

வேண்டுமென்றே பிழையை ஏற்படுத்தி அதை சரி செய்ய நேரில் வரவழைத்து, எவ்வளவு அலைக்கழிக்க வேண்டுமோ அவ்வளவும் பண்ணிவிட்டு முன்பைவிட அதிகமான லஞ்சம் பெற்றுதான் பட்டா வழங்குகிறார்கள். இதை கேள்விப்பட்டு பட்டா விண்ணப்பிக்க வருபவர்கள் கேட்ட லஞ்சத்தை கொடுத்து விடலாம் என்ற மனநிலைக்கு வந்துவிடுகின்றனர்.


sampath surya
மார் 01, 2025 22:03

இதற்கெல்லாம் ஒரு தீர்வு உண்டு அது என்னவெனில், தவறு செய்யும் அதிகாரிகளின் அல்லது அலுவலர்களின் வேலையை உடனடியாக பறிக்க வேண்டும்


V GOPALAN
மார் 01, 2025 19:31

திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் ரோடு இனாம் குளத்தூர் கிராமத்தில் வீடு மனை உள்ளவர்களின் நிலைமை பரிதாபம். மனையின் எல்லை கற்களை குறுப்பிட்ட சமூகத்தினர் பிடுங்கி விடுவார். நில அளவையாளர் பட்டாவீற்காக வந்தால் அவர்களை இந்த சமூகம் மிரட்டி விரட்டி அடடிக்கப்படுகிறார்கள். இதனால் ஏவரும் விற்பதற்கு முடியவில்லை. நஆம் பாகிஸ்தானில் உள்ளொம்மோ என்ற எண்ணம் வருகிறது. நில அளவையர்கள் பணி மிகவும் பரிதாபதிபாக உள்ளது


sangeetha S
பிப் 26, 2025 10:36

Like TNEB name correction, government can initiate a Patta transfer as a major initiative online with a nominal nominal amount. Just name transfer also not done. Added to this registration office ge DVD cost but do not deliver DVD when returning the documents.


sangeetha S
பிப் 26, 2025 10:32

Like TNEB name transfer and correction for a nominal amount Rs.700. Government can ge nominal amount like Rs.100 for name transfer and correction in patta. Copy of sale deed, property tax and EB bill is enough to prove the ownership. This can avoid all bribe issue in registration department. Another point, registration office ge for DVD for last 20 years. But never delivered DVD or CD when returning the documents to party.


Chinnamanibalan
பிப் 25, 2025 14:34

'வருவாய்' துறை என்ற இதன் பெயர் நூற்றுக்கு நூறு சரியே! இங்குள்ள அலுவலர்களுக்கு, ஒவ்வொரு மனு மீதான தட்சணை வருவாயும் போய்ச் சேரவில்லை எனில், மனு கொடுத்தவர்கள் வாழ்நாள் முழுவதும் அலைந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. எனவே பெரும்பாலும் இவர்கள் கேட்டதை கொடுத்து விட்டு, அலைச்சலை தவிர்ப்போர் பலர் உள்ளனர்.


Kanns
பிப் 25, 2025 11:29

RulingPartyGovts, SuperiorOfficials& CourtJudges MUST PUNISH InEfficient, Slow, Costly-Corrupt Negative -NonResponsive, PowerMisusing Officials. Otherwise, Sack& Punish Such Govts, Superiors& Judges being CoConspirinh Criminala


Sundaresan S
பிப் 25, 2025 10:56

பெயர்களில் ஸ்பெல்லிங் பிழைகள்,உறவுமுறையில் பிழைகள்,ஆதமிழ் ஆங்கில மொழி மாற்ற பிழைகள் ,சர்வேஎண்,உட்பிரிவு பிழைகள் சர்வ சாதாரணமாக காணப்படுகின்றன. ஒப்புதல் வழங்கும் அதிகாரிகள் கோப்புகளை படித்து பார்ப்பதில்லை.


baskkaran Kg
பிப் 25, 2025 09:48

இதை மிக எளிதாக சரிசெய்யமுடியும்,எப்படியெனில்,அந்த softwarல் யார் கரெக்ட் செய்கிறார்கள் என்பதை save செய்யும்போது உள்ளீடு ஏற்படுத்தினால் போதும் அதை யார் செய்தர்கல் அ திருத்தினார்கள் எண்று எளிதாக ஆகா கண்டுபிடிக்கலாம்.


Jawaharr Kb
பிப் 25, 2025 09:32

பிழை திருத்த வேண்டுமென்றல், பட்டா மாறுதல் பணம் இருத்தல் தான் முடியும் , அரசு இலவசம் பட்டா மாறுதல் என்கிறது , எல்லாமே பணம் இருத்தல் தான் .


முக்கிய வீடியோ