| ADDED : மே 14, 2024 09:58 PM
மே 15, 1907பஞ்சாம் மாநிலம், லுாதியானா மாவட்டம், லயால்பூரில், ராம்லால் தாபரின் மகனாக, 1907ல் இதே நாளில் பிறந்தவர் சுக்தேவ் தாபர். தன் 3 வயதில் தந்தையை இழந்து, சித்தப்பா அசிந்த்ராமிடம் வளர்ந்தார். லயால்பூர் தன்பத்மல் ஆரியா பள்ளி, சனாதன உயர்நிலை பள்ளிகளில் படித்தார். இவரின் சித்தப்பா ஆரிய சமாஜத்தின் மீதும், விடுதலைப் போரிலும் ஆர்வமுடையவர். அதே ஆர்வம் இவருக்கும் ஏற்பட்டது.பள்ளியில், 'யூனியன் ஜாக்' கொடிக்கு வணக்கம் வைக்காததால் தாக்கப்பட்டார். லாகூர் தேசியக் கல்லுாரியில் சேர்ந்தார். அங்கு, பகத்சிங்குடன் பழகினார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் கவரப்பட்டு, கதராடை அணிந்தார்.போலீஸ் அதிகாரி சாண்டர்ஸ் கொலை வழக்கு, லாகூர் கலவர வழக்குகளில் கைதானார். லாகூர் சிறையில் 15 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். பகத்சிங்கின் போராட்டங்களை சிறையிலிருந்தே ஆதரித்தார். பிரிட்டிஷாரை எதிர்த்ததால், 1931ல், மார்ச் 23ல் துாக்கிலிடப்பட்டார். அன்னியரை எதிர்த்து, 24 வயதில் மறைந்த புரட்சியாளர் பிறந்த தினம் இன்று!