உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

ஜூன் 7, 2008இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழு உறுப்பினரான அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரின் மகனாக, 1923, ஆகஸ்ட் 9ல் சென்னையில் பிறந்தவர், அல்லாடி ராமகிருஷ்ணன். இவர், சென்னை பி.எஸ்.மேல்நிலை பள்ளி, மாநில கல்லுாரியில் படித்தார். இயற்பியலில் பட்டம் பெற்ற இவர், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான சர் சி.வி.ராமன் பரிந்துரைப்படி, இயற்பியல் கண்டுபிடிப்புகளுக்கான கணக்கியல் விதிகளை வகுக்கும், 'கோட்பாட்டு இயற்பியல்' மற்றும் சிறப்பு சார்பியலை படித்தார்.பின், ஹோமி பாபாவுடன், டாடா அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, 'காஸ்மிக்' கதிரியக்க கோட்பாடு மற்றும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து ஆய்வு செய்தார்.பிரிட்டனின் மான்செஸ்டர் பல்கலையில் பணியாற்றினார். 'குவாண்டம்' இயக்கவியல் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து கட்டுரைகளை எழுதினார். இந்தியாவில், 'மேட் சயின்ஸ்' எனும் மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தை துவக்கி, இந்திய மாணவர்களை, நீல்ஸ்போர் உள்ளிட்ட புகழ்பெற்ற விஞ்ஞானிகளுடன் பழக்கிய இவர், 2008ல் தன் 85வது வயதில் இதே நாளில் மறைந்தார். விஞ்ஞானிகளை உருவாக்கிய விஞ்ஞானி மறைந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rangarajan
ஜூன் 07, 2024 00:26

ஆஹா ஆஹா மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இவரு படித்த இதே பள்ளியில்தான் நானும்படித்தேன்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ