உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

ஜூன் 26, 1943ஐரோப்பிய நாடான செக்கில், 1943ல் இதே நாளில் பிறந்தவர் யாரோஸ்லாவ் வாச்செக். இவர், தெற்காசிய கல்விக் கழகத்தில் பயிற்றுனராக இருந்தார். பிராகா சார்லஸ் பல்கலையின் மெய்யியல் துறையின் தலைவராக இருந்து, அங்கு, மங்கோலிய மொழி ஆய்வுத் துறையை உருவாக்கினார். செக் நாட்டு கிழக்கத்திய கழகம், பிராகா மொழியியல் குழுமம் ஆகியவற்றின் உறுப்பினராக இருந்தார். தமிழ், சமஸ்கிருத மொழிகளில் பட்டம் பெற்றார். ரஷ்ய, ஜெர்மன், மங்கோலிய மொழிகளையும் கற்று தேர்ந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து வெளியாகும் திராவிட மொழியியலுக்கான பன்னாட்டு ஆய்விதழ், புதுச்சேரியில் இருந்து வெளியாகும் திராவிட கற்கை ஆய்விதழ்களின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார்.'பகவத் கீதை'யை பிராகா மொழியில் மொழிபெயர்த்தார். இவரின் தமிழாய்வு கட்டுரைகள், செம்மொழி அங்கீகாரத்துக்கு உதவின. 'சங்க இலக்கியத்தில் இயற்கை குறியீடு' உள்ளிட்ட நுால்களை எழுதியுள்ளார். இவர், தன் 74வது வயதில், 2017 ஜனவரி 23ல் மறைந்தார்.தமிழ் வளர்ச்சி பணிகளுக்கான, 'குறள் பீடம்' விருது பெற்ற தமிழறிஞர் பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை