உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாமரை பிரதர்ஸ் பதிப்பக (Thamarai Brothers Publication) வெளியீட்டில் அண்ணாமலையின் உங்களில் ஒருவன்

தாமரை பிரதர்ஸ் பதிப்பக (Thamarai Brothers Publication) வெளியீட்டில் அண்ணாமலையின் உங்களில் ஒருவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தாமரை பிரதர்ஸ் பதிப்பக (Thamarai Brothers Publication) வெளியீட்டில் அண்ணாமலையின் உங்களில் ஒருவன் புத்தக வெளியீடு சென்னையில் நடந்தது.

வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி அன்று, புண்ணிய பூமியான ராமேஸ்வரம் மண்ணில் தொடங்கிய, தமிழக பாஜகவின் என் மண் என் மக்கள் நடைப்பயணத்தில், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், பொதுமக்களோடு பயணித்த ஒவ்வொரு அனுபவத்தையும், தினந்தோறும் பதிவு செய்யும் வாய்ப்பினை தினமலர் நாளிதழ் வழங்கியிருந்தது. தற்போது, நாளிதழில் வெளியான நமது பயண அனுபவங்களைத் தொகுத்து, 'உங்களில் ஒருவன்' என்ற புத்தகமாக வெளியிட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று காலை, தினமலர் நாளிதழ் வெளியீட்டாளர் ( கோவை) திரு.ஆதிமூலம், தினமலர் நாளிதழ் இணை ஆசிரியர் திரு.இரா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில்,தினமலர் நாளிதழ் வெளியீட்டாளர் (மதுரை) மரியாதைக்குரிய திரு. Dr. L.ராமசுப்பு அவர்களிடம், 'உங்களில் ஒருவன்' புத்தகத்தைப் பெற்றுக் கொண்டதில் பெருமையடைகிறேன். பெரும் பாரம்பரியமிக்க, தேசியச் சிந்தனை மிக்க தினமலர் நாளிதழ், குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைப்பதற்கான போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்ததோடு, பொதுமக்கள் நலனுக்காக எப்போதுமே குரல் கொடுத்து வரும் பெருமைக்குரியது. அரசுகள் தவறிழைக்கும் போது, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்து, ஜனநாயகத்தின், வலிமையான நான்காவது தூண் என்ற பத்திரிகை தர்மத்தினையும் கடைப்பிடித்து வரும் சிறப்புக்குரியது. கடந்த 73 ஆண்டுகளாக, சீரிய முறையில் செயலாற்றி வரும் தினமலர் நாளிதழில், என் மண் என் மக்கள் பயண அனுபவங்களை, பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பினை வழங்கியதற்கும், அவற்றை, 'உங்களில் ஒருவன்' என்ற புத்தகமாக வெளியிட்டிருப்பதற்கும், நாளிதழ் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
ஆக 24, 2024 11:04

இதை இலவசமாகக் கொடுத்தால் கூட யாரும் வாங்கி படிக்க மாட்டார்களே!


சமூக நல விரும்பி
ஆக 23, 2024 22:43

Thinamalar the great fighting for the welfare of the public. Congratulations


வீரபாஸ்கர்
ஆக 23, 2024 21:43

எங்களில் ஒருவனா? 200 ரூவா உ.பி ல ஒருத்தனா? இங்கே அவிங்கதானே இருக்காங்க. யார் கிட்டே ரஃபல் வாட்ச் இருக்கு? யாருக்கு மாசம் மூணு லட்சம் செலவுக்குக் குடுக்குற நண்பர்கள் இருக்காங்க?


பாரதி
ஆக 23, 2024 20:53

தினமலரின் நல்லெண்ணம் நாட்டுக்கு நன்மை செய்வது.. நன்றிகள்.... வாழ்க.....


r ravichandran
ஆக 23, 2024 19:45

தினமலர் நாளிதழ் என்றுமே தேசிய நலன் சார்ந்த விஷயங்களை முன்னெடுத்து செல்வது மிகவும் பாராட்டத்தக்கது.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை