உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரசாரத்தில் எதிர்ப்பு: அப்செட் ஆன கார்த்தி

பிரசாரத்தில் எதிர்ப்பு: அப்செட் ஆன கார்த்தி

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில் பிரசாரத்தின் தொடக்கத்திலேயே சிவகங்கை தொகுதி காங்., வேட்பாளர் கார்த்திக்கிற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அப்செட் ஆனார்.நேற்று மாலை 4:00 மணிக்கு திருப்புவனம் ஒன்றியத்தில் கார்த்தி பிரசாரத்தை தொடங்கினார். நயினார்பேட்டையில் தொடங்கி வெள்ளக்கரை வந்த போது கூடியிருந்த பொதுமக்கள் சேகர் என்பவர் தலைமையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.சிவகங்கையில் சிதம்பரமும், கார்த்தியும் மாறி மாறி எம்.பி., யாக இருந்து என்ன பிரயோஜனம். தொகுதியில் வேலைவாய்ப்பு கிடையாது, வெள்ளக்கரையில் ஒரு பஸ் ஸ்டாப் கூட கட்டி தரவில்லை, வெயிலிலிலும், மழையிலும் காத்திருந்து பஸ் ஏற வேண்டியுள்ளது என எதிர்ப்புக்குரல் எழுப்பினர்.கார்த்தியோ மானாமதுரை சட்டசபை தொகுதிக்கு நிறைய நலத்திட்ட உதவிகள் கொண்டு வந்துள்ளேன் என சமாளிக்க முயன்றார். ஆனால் சிலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கவே தி.மு.க.,வினரும், காங்கிரஸ் கட்சியினரும் எதிர்ப்பு குரல் எழுப்பியவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர்கள் கோஷமிடவே நீங்கள் எல்லோரும் அ.தி.மு.க.,வினர், அவர்களிடம் கேளுங்கள் என பதில் அளித்தனர்.பிரசாரத்தின் தொடக்கத்திலேயே எதிர்ப்பு கிளம்பியதால் கார்த்தி அப்செட் ஆனார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

panneer selvam
ஏப் 07, 2024 14:31

Kartik ji , now the climate is hot and people are also hot so better to do digital campaign by sitting in AC rooms and give a contract to foreign companies to do election work including campaign like wall poster , guest speakers , record dance and distribution of freebies


J.V. Iyer
ஏப் 06, 2024 06:28

அண்ணா வீட்டிற்குள்ளேயே வாக்கு சேகரியுங்கள் யாரும் எதிர்க்கமாட்டார்கள் பாவம் நீங்கள்


Mani . V
ஏப் 06, 2024 04:26

நொன்னை, அதிமுக வினரும் சிவகங்கை தொகுதிக்கு உட்பட்டவர்கள்தானே? அதுசரி, திமுக வினருக்கும், காங்கிரஸ் காரர்களுக்கும் பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டிக் கொடுத்துள்ளாயா? இல்லையா? அதை சொல்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை