உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் கடைகளில் மதுபானம், கள் விற்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க உத்தரவு

ரேஷன் கடைகளில் மதுபானம், கள் விற்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியும், சூப்பர் மார்க்கெட், ரேஷன் கடைகளில் மது விற்க அனுமதி கோரியும் அளித்த மனுவை, அரசு பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை கோட்டூரை சேர்ந்த முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த மனு:கடந்த 2003 முதல், 'டாஸ்மாக்' நிறுவனம் வாயிலாக மது விற்பனை நடக்கிறது. சில்லரை விலைக்கும் கூடுதலாக மதுபானங்கள் விற்கப்படுகின்றன. மொத்த விற்பனையில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடக்கிறது.

மறுபரிசீலனை

இந்தத் தொகை, விற்பனையாளர் முதல் துறையின் அமைச்சர் வரை பங்கிடப்படுவதாக, தகவல் கள் தெரிவிக்கின்றன.பெரும்பாலான மதுபான தயாரிப்பு நிறுவனங் கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக உள்ளன. இதனால், குறிப்பிட்ட சில, 'பிராண்ட்' மதுபானங்களை மட்டுமே டாஸ்மாக் நிறுவனம் விற்கிறது. மதுபானங்களை விட, கள்ளில் ஆல்கஹால் அளவு மிகக்குறைவாக உள்ளது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில், எந்த இடையூறும் இன்றி கள் விற்பனை நடக்கிறது. இதை, ஆரோக்கிய பானமாக கருதுகின்றனர். அரசு விதித்த தடையை மறுபரிசீலனை செய்யலாம். கள் விற்பனையை ஒழுங்குபடுத்தலாம். எனவே, சூப்பர் மார்க்கெட்டுகளில் அனைத்து ரக மதுபானங்களும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். நியாய விலை கடைகளில், குறைந்த விலையில் மதுபானம் கிடைக்க வேண்டும். கள் விற்பனைக்கான தடையை நீக்க வேண்டும். ஒவ்வொரு கடைக்கும் வெளியில், அதிக விலையில் மது விற்கவில்லை என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.கள் விற்பனைக்கு தடை விதித்த, 1986ம் ஆண்டிலும், டாஸ்மாக் கடைகள் வாயிலாக மதுபான விற்பனைக்கு அனுமதித்த, 2003ம் ஆண்டிலும் அமல்படுத்திய சட்டத் திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், குமரேஷ்பாபு அடங்கிய, 'முதல் அமர்வு' முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. தன் குற்றச்சாட்டுகள் குறித்து, மோசடி வழக்குகளை விசாரிக்கும் புலனாய்வு பிரிவின் விசாரணைக்கு உத்தரவிடும்படி, மனுதாரரான முரளிதரன் கோரினார்.அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், இந்த வழக்கில் விரிவான பதில் மனுத்தாக்கல் செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து, குற்றச்சாட்டுக் கள் குறித்து அரசு பதில் அளிக்காமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது என, முதல் அமர்வு தெரிவித்தது.

கொள்கை முடிவு

கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்க சில பரிந்துரைகளை மனுதாரர் தெரிவித்திருப்பதாகவும், அரசின் கொள்கை முடிவு என்பதால், அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் முதல் அமர்வு தெரிவித்தது. ரேஷன் கடை மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் மது விற்பனை மற்றும் கள் விற்பனைக்கான தடையை நீக்கக்கோரிய மனுதாரரின் மனுவை, அரசு பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கவும், உத்தரவிட்ட முதல் அமர்வு, விசாரணையை, எட்டு வாரங் களுக்கு தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

R.Varadarajan
ஜூலை 31, 2024 04:30

குடியை ஒழிக்கவேண்டும் என குரல் ஒலிக்கும் இத்தருணத்தில் அதன் விற்பனையை பிரபலப்படுத்துவதற்கு ஆதரவளிப்பது கண்டிக்கத்தக்கது இதுதான் நீதித்துறையின் பொறுப்பான வேலையா?


Ramaswamy Jayaraman
ஜூலை 30, 2024 14:02

மிக மிக நல்ல முடிவு. நாடு எங்கு செல்கிறது என்ற முந்தைய கேள்விகளுக்கு , நல்ல பதில் கிடைக்கிறது. நமக்கு பிடிக்கவில்லை என்றால் நாம்தான் விலகிக்கொள்ள வேண்டும்.


ஆரூர் ரங்
ஜூலை 30, 2024 11:44

கோர்ட் க்கு மக்கள் நலன் நிம்மதி சட்டம் பற்றி எவ்வளவு கரிசனம்? ரேஷன் கியூ வில் நிற்பவர்கள் பெண்களே அதிகம். அவர்களும் பாட்டில் வாங்குவர்?


T Gopalakrishnan
ஜூலை 30, 2024 11:14

அடுத்த idea கஞ்சா, சிகரெட், சைடு டிஷ் இவைகளையும் ரேஷன் கடைகளில் விற்கலாம் நீதி துறை. ஐயகோ.


SIVA
ஜூலை 30, 2024 11:47

கஞ்சா விற்பது சட்டப்படி குற்றம், வேணும்னா தலைமை செயலகம், அரசு மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் மேலும் இது போன்ற அரசு அலுவலகங்களில் விற்பனை செய்யலாம் ....


Venkatesan
ஜூலை 30, 2024 11:14

ரேஷன் கடைகளில் சரக்கு பதுக்கல்ன்னு இனிமே செய்தி மொட்டையா போட முடியாது.


Mani . V
ஜூலை 30, 2024 11:11

வெகு விரைவில் டோர் டெலிவரி செய்ய வாய்ப்புண்டு. மாடலின் சாதனை.


sridhar
ஜூலை 30, 2024 10:50

பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும், யோசனை இல்லாத ஐடியா .


R S BALA
ஜூலை 30, 2024 10:10

இன்னும் என்னவெல்லாம் பண்ணப்போறாய்ங்களோ...?


pandit
ஜூலை 30, 2024 10:01

ஏற்கனவே சில ரேஷன் கடைகளில் ரேஷன் இல்லாத பொருளை வாங்க சொல்கிறார்கள். இனி ஒரு குவாட்டர் வாங்கினால்தான் ரேஷன் என்பார்களோ


கூமூட்டை
ஜூலை 30, 2024 10:37

இது தான் சாராய மயக்கம் மாடல் ரேஷன் கார்டு இலவச சாராயம் கொடுத்து உதவலாம் மக்கள் மாங்காய் மடையர்கள் மாடல்


Shekar
ஜூலை 30, 2024 09:45

ஆஹா, என்ன ஒரு சமூக சிந்தனை மிக்க தொலைநோக்கு பார்வை கொண்ட தீர்ப்பு. எஜமான் ஒவ்வொரு முனிசிபாலிட்டியையும் குடிநீர் பைப்பில் காலை நாலு மணிமுதல் முப்பது நிமிடங்களுக்கு குடிநீரும், மீதியுள்ள இருபத்திமூனரை மணிநேரம் உற்சாக பணம் விடவும் கட்டளையிடுங்கள். மீட்டர் படி பில் போட்டுக்கலாம். அதிகவிலை என்ற பேச்சுக்கே இடமில்லை, அரசும் எளிதில் சேல்ஸ் டார்கெட்டை அடையலாம்.


Venkatesan
ஜூலை 30, 2024 11:17

லிட்டருக்கு எஷ்டிரா 10 ரூபாய் யாரு கொடுப்பாங்க?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை