உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்திற்கு 45.9 டி.எம்.சி., நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு

தமிழகத்திற்கு 45.9 டி.எம்.சி., நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதம், 45.9 டி.எம்.சி., நீர் திறக்க, கர்நாடகாவிற்கு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டுள்ளது.காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நேற்று நடந்தது. இதில், தமிழகம் சார்பில், காவிரி தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சுப்பிரமணியம், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் தயாளகுமார் ஆகியோர் பங்கேற்றனர். காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அதிக நீர் திறக்கப்பட்டு வருவதாக, கர்நாடக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பேசிய தமிழக பிரதிநிதி தயாளகுமார், ''கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. நாங்கள் தமிழகத்தின் உரிமை நீரை கேட்கிறோம். எனவே, உபரிநீரை கணக்கில் கொள்ளாமல், ஆகஸ்ட் மாதத்திற்கான நீரை வழங்க வேண்டும்,'' என்று, வலியுறுத்தினார். அதையேற்று, தமிழகத்திற்கு ஆகஸ்டில், 45.9 டி.எம்.சி., நீரை திறக்க, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு தலைவர் வினீத் குப்தா உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 01, 2024 12:53

தமிழகம் கேட்டது காவிரி ஆணையம் உத்தரவு இட்டது. கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டது. தமிழகத்தின் குரல் ஓங்கி ஒழித்தது. கர்நாடகம் பெரிய மனதுடன் வாரி வழங்கியது. இனி இரண்டு மூன்று மாதங்களுக்கு கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் காவிரி நதி நீர் பங்கீடு விவசாயிகள் போராட்டம் போன்ற செய்திகள் தமிழக தொலைகாட்சிகளில் இருக்காது அதற்கு பதிலாக தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் புகழ் மட்டுமே பாடப் படும்.


Sukumar
ஜூலை 31, 2024 13:40

இரண்டு நண்பர்கள் காட்டுவழி செல்லும் போது, வழிப்பறி திருடர்கள் வழி மறித்த சமயம் பார்த்து ஒருவன் அடுத்தவனிடம் பட்டிருந்த கடனை திருப்பிச் கொடுத்து முடித்த கதையாக இருக்கிறது


skv srinivasankrishnaveni
ஜூலை 31, 2024 11:31

வெள்ளாமைக்கு நீர் கேட்டால் தரமறுத்தான் இன்று அபரிமிதமா மலைக்கோட்டை உபரியாவே வந்து மேட்டூர் அணை நிரம்பிருக்கு அந்த மாநிலத்துலே உற்பத்தியாறது உண்மை ஆனால் இப்படி நிறைஞ்சு வழியும் போது கூட அந்த அரசு THARALEENGKA தானாவே தான் வந்துருக்கா அன்னை காவிரி காவேரி விஷயமலே கர்நாடகா லே எவன் ஆண்டாலும் ரொம்பவே ஒத்துமையை பாலோ பண்ரான்னுக தாராளமா தாராளம் மனசு தமிழ்நாட்டு அரிசி மட்டும் வேண்டும் KANJAPISINAARIKAL


chennai sivakumar
ஜூலை 31, 2024 10:24

கவுண்டமணி செந்தில் காமெடி போல இருக்கிறது


Swaminathan L
ஜூலை 31, 2024 10:08

எவ்வளவு நீரைத் திறந்து விட்டாலும் கடைமடை வரை வரவில்லை என்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் புகார் பேட்டி தரத் தான் போகிறார்கள். குடி மராமத்து மூலம் அந்தந்த ஊர் மக்கள் அவரவர் ஊர் நீர்நிலைகள், நதிப் பகுதிகள் ஆகியவற்றைத் தூரெடுத்து பராமரித்ததெல்லாம் போய் இப்போது நீர் கடலுக்குள் போன பின்னர் புகார் சொல்லி என்ன பிரயோஜனம்?


Ms Mahadevan Mahadevan
ஜூலை 31, 2024 09:45

மழை பெய்யும் முன்பு வந்திருக்க வேண்டிய உத்தரவு. அதை கர்நாடகா செயல் படுத்திருக்க வேண்டும் . இப்போது சொல்லி சும்மா பூ சுற்றுகிறார்கள். ஜெய்ஹிந்த்


VENKATASUBRAMANIAN
ஜூலை 31, 2024 08:38

வருகிற தண்ணீரை சேமிக்க துப்பில்லை. எல்லாம் கடலில் வீணாகிறது. இங்கே அரசியல் பேசி ஓட்டுகிறார்கள் .ஒரு அணைகட்டக்கூட தடுப்பதில்லை.


Palanisamy Sekar
ஜூலை 31, 2024 08:30

அடேங்கப்பா என்னமா நடிக்கிறாங்க நம்ம ஆளுக. சரி அவர்களும் இவர்கள் கேட்கின்ற நீரை கொடுப்பதாகவே வைத்துக்கொள்வோம். அந்த நீரை சேமிக்க எவ்வளவு தடுப்பணைகள் இங்கே தமிழகத்தில் இருக்கின்றன என்று சொல்லமுடியுமா? டாஸ்மாக் சாராயத்தை சேர்த்துவைக்க குடோன் கட்ட தெரிந்த இந்த தி திவிட மாடல் அரசுக்கு இதுவரை ஏதாச்சும் அணைகளை கட்டுவதற்கு யோசித்திருப்பார்களா? மக்களை ஏமாற்ற விடுகின்ற செய்தி இது.


சந்திரசேகர்
ஜூலை 31, 2024 08:30

தமிழ்நாட்டை சுற்றி காவிரி இணைப்பு வாய்க்கால் தோண்டி மழை அதிகமாக பெய்யும் நாட்களில் தண்ணீரை எல்லா இடங்களிலும் சேமிக்க வழி செய்யலாம்


shyamnats
ஜூலை 31, 2024 07:56

எப்போது தேவையோ அப்போது வழங்க மறுத்தன அண்டை மாநிலங்கள். ஆணையம் ஆணைகளை காற்றில் பறக்க விட்டார்கள். இப்போது உபரி நீரை வேறு வழியில்லாமல் திறந்து விடும்போது இந்த ஆணைகள் தேவையா. அப்படியே திறந்து விட்டாலும் தமிழகம் என்ன செய்ய போகிறது. நீண்ட கால நோக்கோடு என்னென்ன திட்டங்கள் செயல் படுத்த பட்டிருக்கின்றன, இந்த நீரை சேமிக்க . தீவிரமான அணுகுமுறை தேவை.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ