உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பணி: பழனிசாமி எதிர்ப்பு

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பணி: பழனிசாமி எதிர்ப்பு

சென்னை: ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் தி.மு.க., அரசு பணியமர்த்துவதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

2021 சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க., தேர்தல் அறிக்கையில், அரசு துறைகளில், 5.50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களில், 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர் என்றும், முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.இப்போது, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்தப்படுகின்றனர். தலைமை செயலகத்தில் பிரிவு அலுவலர்கள், சார்பு, துணை, இணை, கூடுதல் செயலர்கள் நிலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.இந்நிலையில், சிறப்புத் திட்ட செயலாக்க துறைக்கு, மாதம் ஒரு லட்சம் ரூபாய் தொகுப்பூதியத்தில், தற்காலிக ஆலோசகராக பணிபுரிய, துணைச் செயலர் பதவி நிலைக்கு குறையாத பதவியில் ஓய்வுபெற்றவர்கள் விண்ணப்பிக்குமாறு விளம்பரம் வந்துள்ளது.அரசு வேலைக்காக தவமிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு, இந்த அறிவிப்பு பேரிடியாக அமைந்துள்ளது. எனவே, டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக தேர்வு நடத்தி, அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் வெங்கடேசன் அறிக்கை:

பெரும்பாலும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஓய்வுபெற்ற பின், ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர். தற்போது ஆலோசகர்களின் நியமனங்கள், எவ்வித வரைமுறையும் இன்றி உள்ளன. இவர்களின் ஊதிய நிர்ணயத்திற்கு எந்த வழிகாட்டுதலும் பின்பற்றுப்படுவதில்லை.தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்க துறையில், ஆலோசகர் பதவிக்கு ஒரு லட்சம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வாகி வருபவர்களின் முக்கியத்துவம் மற்றும் திறமையையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, ஆலோசகர்கள் வாயிலாக, அரசு நிர்வாகத்தை நடத்துவது ஏற்புடையதல்ல.ஆலோசகர்களின் அறிவுரைப்படி அரசின் கொள்கை முடிவை மேற்கொள்ளும்போக்கு என்பது, சமூக நீதிக்கு எதிரானது. மத்திய அரசு, இணை செயலர், துணை செயலர், இயக்குனர் நிலையில் 45 பணியிடங்களை, மத்திய அரசு தன்னிச்சையாக நிரப்ப முயற்சித்தபோது, தமிழக அரசு எதிர்த்து குரல் கொடுத்தது.தற்போது, மாநில அரசில் எந்தவித சலனமுமின்றி, ஆலோசகர்கள் நியமனங்களை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த போக்கு நீடித்தால், இளைய சமூகத்தின் அரசு வேலை என்ற கனவு சீரழிந்து விடும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Kanns
மார் 12, 2025 18:45

Simply Tax them 100%


Mecca Shivan
மார் 12, 2025 18:28

உயர்நீதிமன்றம் அப்படித்தானே செய்கிறது .. ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வேலை என்பது வேலை இல்லா இளைஞர்களுக்கு செய்யப்படும் துரோகம் .. ஓய்வு பெற்றவர்கள் திறமையானவர்களாக இருந்தால் அவர்களில் சரியானவரை அவரது பணி ஆவணத்தினை பார்த்து தகுதிப்பார்த்து கன்சல்டண்டாக நியமிக்கலாம் ..அதிகபட்சம் ஆறுமாதம் மட்டுமே பணியமரத்தப்படவேண்டும்..அவ்வாறு நியமிக்கப்படும் பட்சத்தில் அவர்களது கடைசி அடிப்படை சம்பளத்தில் 30 சதவிகித்திற்கு மேல் சம்பளம் கொடுக்கக்கூடாது .. நீட்டிப்பு செய்யப்படக்கூடாது


M Ramachandran
மார் 12, 2025 13:16

அப்போதைக்கப்போ பழனி சாமி சாமியார் நான் உள்ளேய்யா என்று கோக்ஷம். பெரியா கனமான முடிப்பினால் மாடி அதிக கனமாயிடுச்சி. அதனால் ஆம் அதிகமா குரல் எழும்ப மாட்டேன் என்குது


ஆரூர் ரங்
மார் 12, 2025 12:22

இந்த ஆலோசகர் பதவிகளை சமூகநீதிப்படி இடஒதுக்கீட்டை ப் பின்பற்றாமல் நியமிப்பர். காசேதான் கடவுளடா .


குடந்தை செல்வகுமார்
மார் 12, 2025 12:16

புது ஊழியர்களை நியமிக்க கஜான வில் பணம் இல்லை என்பதே உண்மை. எட்டாவது சம்பள கமிஷன் வந்தால் கடை நிலை ஊழியர்கு மாதம் 2 லக்ஷமாக சம்பளம் உயரும்


Bhaskaran
மார் 12, 2025 12:07

பல கிளை நூலகங்களில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தொகுப்பு ஊதியம் பெற்று பணியாற்றுகின்றனர் ஏற்கனவே மாதம் 50000 பென்ஷனுடன் இது இவர்களுக்கு உபரி வருமானம். முதலில் இப்பேர்பட்ட வேர்களை விரட்டி விட்டு பணியில்லா இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்.


Amar Akbar Antony
மார் 12, 2025 11:47

பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால் மனைவியையும் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளவேண்டியதுதானே? அறிவும் புத்திக்கூர்மையும் இருந்தால் தனியார் நிறுவனங்களுக்கு செல்ல வேண்டியதுதானே? தி மு க எனும் குடும்பக்கட்சிக்கு மற்றவர்களை பற்றி அக்கறையில்லை. கொஞ்சம்கூட இளையதலைமுறையினரின் எதிர்காலத்தை பற்றி கவலையில்லாத அரசு.


Janarthanan
மார் 12, 2025 11:26

அரசு, செலவினம் குறைப்பதற்காக, அரசு பணியிலிருந்து ஒய்வு பெற்ற பணியாளர்களை மீண்டும் பணியமர்த்துகிறது. ஒய்வு பெற்ற பணியாளர் மீண்டும் பணியில் சேர விருப்பம்தெரிவிப்பதற்கு முன்பு தாம் இளைஞர்களுக்கான பணியையும், எதிகாலத்தையும் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கனவையும் பரிக்கின்றோமே என்பதை நினைவில் கொள்ளவேண்டும். புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு உரிய பயிர்ச்சி அளித்தால் அவர்களும் மிகவும் திறமையாக பணியாற்ற போகிறார்கள். IAS தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உரிய பயிர்ச்சி அளித்த பின்பே பணியிடம் வழங்கப்படுகிறது. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினால் நாடு முன்னேற்றமடையும். குற்றங்கள் நிகழ வாய்ப்பு குறையும். எனவே ஒய்வு பெற்ற பணியாளர்கள் மீண்டும் பணியில் சேராமல் இருந்தாலே இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் நாடும் சிறப்படையும்.


aaruthirumalai
மார் 12, 2025 10:35

அட படித்தவன் அவ்ளோ பேரு வேலை இல்லாம இருக்கான்.... ஏன் இப்படி


..
மார் 12, 2025 10:17

நீங்கள் ஐம்பத்தெட்டில் ஓய்வு என்பதை அறுபது ஆக்கி சமூகநீதி காத்ததுபோல


Ray
மார் 12, 2025 20:40

Retirement age of TN government staff increased to 60 years Updated - February 25, 2021 12:57 pm IST - this in during EDAPADY regime. பணி ஓய்வு பணபலன்கள் லக்ஷக் கணக்கில் தர பண்டம் இல்லாமல் தான் ஒத்திப் போட்டார்


முக்கிய வீடியோ