உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மா.செ.,க்கள் மீது புகார் சொல்ல பழனிசாமி தடை: நிர்வாகிகள் அதிருப்தி

மா.செ.,க்கள் மீது புகார் சொல்ல பழனிசாமி தடை: நிர்வாகிகள் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட செயலர்கள் குறித்து பேச அனுமதிக்காதது, நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆரணி, தென்காசி நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது குறித்து கட்சியினர் கூறியதாவது:ஆரணி கூட்டத்தில், போளூர் ராஜன் என்பவர், மாவட்ட செயலர் ஜெயசுதா மீது, சில குற்றச்சாட்டுகளை வைத்தார். அப்போது பழனிசாமி குறுக்கிட்டு, 'தனிப்பட்ட நபர்கள் குறித்து பேச வேண்டாம்' என கண்டித்ததும், 'பேசுவதற்கு தானே கூட்டம்' என அவர் எதிர்த்து பேச, பழனிசாமி அதிர்ச்சி அடைந்தார்.அப்போது துணை பொதுச்செயலர் முனுசாமி குறுக்கிட்டு, 'ஜெயலலிதா இருந்தால் இப்படி பேசுவீர்களா? பொதுச்செயலர் அமரச் சொன்னால், உடனே அமர வேண்டும்' என அறிவுரை கூறி, அமர வைத்தார். தென்காசி கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என நிர்வாகிகளிடம் பழனிசாமி கேட்டார். அதற்கு நிர்வாகிகள், 'ஒரே சமூகத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோர் போட்டியிட்டதால், ஓட்டுகள் பிரிந்து விட்டன. நம் கட்சி வேட்பாளரை களம் இறக்கி இருந்தால், கட்சி வெற்றியடைந்திருக்கும்' என்றனர்.அதை கேட்ட பழனிசாமி, 'நம் கட்சி சின்னத்தில் தான் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். நீங்கள் கடுமையாக உழைத்திருந்தால், அவர் வெற்றி பெற்றிருப்பார். வேட்பாளர் குறித்து கவலைப்படாமல், சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும். சட்டசபை தேர்தலில், நீங்கள் எதிர்பார்க்கும் வலுவான கூட்டணி அமையும்' என்றார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.கூட்டம் குறித்து, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:கட்சி வளர்ச்சி குறித்து பழனிசாமி பேசினார். சட்டசபை தேர்தலுக்கான களப்பணியை துவக்கி உள்ளோம். தேர்தல் வியூகத்தை பழனிசாமி அமைத்து கொடுத்துள்ளார். மத்திய அரசு பட்ஜெட்டில், தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது வருத்தம் அளிக்கிறது. அனைவருக்கும் பொதுவானவர் பிரதமர். தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்காதது தவறு. தமிழகத்திற்கு மத்திய நிதி ஒதுக்காதது தவறு. அதற்கு அழுத்தம் கொடுக்காதது, தி.மு.க., அரசின் தப்பு.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Rpalnivelu
ஜூலை 26, 2024 11:00

அதிமுகவை எடப்பாடி டெட்பாடியா ஆக்காமல் ஓய மாட்டார். இவ்வார துக்ளக் கார்ட்டூனை பாருங்க


krishna Kumar
ஜூலை 26, 2024 09:07

oru thappa aanna thalaivar edappadi for AIADMK......... இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்


Durai Kuppusami
ஜூலை 26, 2024 07:35

எல்லா அல்லக்கைகளை பக்கத்தில் உட்கார வைத்துக்கோண்டு பேசுபவரை உட்கார சொன்னா அந்த நிர்வாகி பேசுவதற்குதானே இந்த ஆலோசனை கூட்டம் எதிர் கேள்வி கேட்ட அந்த நிர்வாகி போல் எல்லா நிர்வாகிகளும் கேட்கவேண்டும்.அம்மாவும் இவரும் சரிசமமா. தலைவரோ அம்மாவோ அவர்கள் கால்தூசிக்கு சமமாட்டீர்கள் தலைவர் எதற்காக இந்த கட்சியை துவக்கினாரோ அந்த கட்சியை யாருக்கோ அடகு வைத்துவிட்டு கட்சியை அழிக்க பார்க்கிரீர்கள் அவர்கள் ஆன்மா உங்களை சும்மா விடாது. தலைவர் கட்சி ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை.. கட்சியின் விசுவாசியாக உள்ளவன்...


Kadaparai Mani
ஜூலை 26, 2024 11:23

திமுக பாஜக இரண்டு எதிரிகளை சரிசமமாக பார்க்கும் எடப்பாடி வெற்றி பெறுவார் .கட்சியை காப்பாற்றி வெற்றி பெற போகிறவர் எடப்பாடி .


Palanisamy Sekar
ஜூலை 26, 2024 07:23

எடப்பாடி அவர்கள் அதிமுக என்கிற கட்சியை சிதைத்துக் கொண்டுள்ளார். முனுசாமி போன்றோரின் பேச்சை கேட்டுக் கொண்டு கட்சிக்காக உழைத்தவர்கள் குரலை அடக்க பார்க்கின்றார். வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் முனுசாமி திமுகவில் சேர்ந்துவிடுவார். அதற்குள் எப்படியாவது அதிமுகவை சிதைத்துவிடுவது என்கிற நோக்கத்தோடு செயல்படுகின்ற முனுசாமி பேச்சை கேட்டு செயல்படும் எடப்பாடியால் கட்சியில் பெரிய அளவுக்கு பிளவு ஏற்படுவதை யாராலும் தடுக்கவே முடியாது. தன்னை எம்ஜி யார் அளவுக்கு மனதில் நினைத்துக்கொண்டு தலைக்கனத்தில் இருக்கும் எடப்பாடியை கட்சியினர் விரைவில் ஒதுக்கி விடுவார்கள். எடப்பாடியின் தலைமைக்கு பின்னர் தொடர் தோல்வியும், திமுகவுக்கு மறைமுகமாக உதவுகின்ற செயல்களையும் தொண்டர்களும் சரி பிற தலைவர்களும் சரி அறியாமலில்லை. பொறுத்திருந்து பாருங்கள்


Raj Kamal
ஜூலை 26, 2024 10:39

எவ்வளவு நாள் பொறுக்க வேண்டும் சேகர்? ADMK என்ற கட்சி அழியும் வரையா?


Kadaparai Mani
ஜூலை 26, 2024 11:29

அதிமுக அழிய வேண்டும் என்று நினைப்பது தீய சக்தி கட்சி மற்றும் அடுத்தக்கட்சி மூலம் தனது கட்சி வளருமா என்று கனவு காணும் கட்சி .நான் இரண்டாவது சொன்ன கட்சி நூறு வருடம் ஆனாலும் தமிழ் நாட்டில் முதன்மை கட்சியாக வர முடியாது .திமுகவிற்கு என்றும் பயம் அதிமுகவை பார்த்துதான் .அதிமுகவிற்கு செல்வாக்கு இல்லை என்றால் தினமும் அதிமுக செய்தி மீடியாவில் ஏன் வருகிறது .அதிமுக மிகப்பெரிய கூட்டணி அமைத்து 2026 ஆம் ஆண்டு ஆட்சியை பிடிக்கும்


ramani
ஜூலை 26, 2024 06:48

காங்கிரஸ் கட்சி அழிந்து விட்டது அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம். இடைப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த ஜென்மத்தில் அதிமுக வெற்றி பெறாது


குமரி குருவி
ஜூலை 26, 2024 05:47

மா.செ .கள் ஆதரவை பெற அருமையான தந்திரம்..


Kasimani Baskaran
ஜூலை 26, 2024 05:23

மாசெ கள் தலைமையால் திணிக்கப்படுபவர்கள் - ஆகவே அவர்களை மாற்றினால் தலைமைக்கு ஆபத்து. உனக்கு நான், எனக்கு நீ போன்ற திட்டம்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை