உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாகநாதசுவாமி கோயிலில் பன்னீர்செல்வம் தரிசனம்

நாகநாதசுவாமி கோயிலில் பன்னீர்செல்வம் தரிசனம்

நயினார்கோவில்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரிசனம் செய்தார்.நயினார்கோவிலில் பிரசித்தி பெற்ற சவுந்தர்ய நாயகி, நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு ராமநாதபுரம் லோக்சபா தொகுதி பா.ஜ., கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு தரிசனம் செய்தார். கோயில் கொடிமரம் முன் நாகநாதர் சிலைக்கு உப்பு படைத்து விளக்கேற்றினார். தொடர்ந்து சுவாமி, அம்பாள் சன்னதியில் தரிசித்த பின் நவகிரக சந்நதியில் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டார்.மண்டபம் ஒன்றியத்திற்குட்பட்ட நதிப்பாலம், உச்சிபுளியில் நீர்மோர் பந்தலையும் பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். எம்.பி., தர்மர், நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை