உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நின்றிருந்த காருக்கு கேரளாவில் கழிந்த பாஸ்டேக் கட்டணம்

நின்றிருந்த காருக்கு கேரளாவில் கழிந்த பாஸ்டேக் கட்டணம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் வீட்டில் நின்றிருந்த காருக்கு கேரள மாநிலம் திருச்சூர் -அங்கமாலி வழித்தடத்தில் உள்ள டோல்கேட்டில் பாஸ்டேக் கட்டணம் எடுக்கப்பட்டுள்ளதாக வந்த குறுந்தகவலை பார்த்து கார் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.ஸ்ரீவில்லிபுத்துார் பட்டத்தரசி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் ஞானராஜ் 60, அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இவர் கார் மே 29ல் வீட்டில் இருந்துள்ளது. மே 30 அதிகாலை 2:10 மணிக்கு கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து அங்கமாலி வழியாக செல்லும் வழித்தடத்தில் பலியக்காரா டோல்கேட்டை கார் கடந்து சென்றதாகவும், அதற்கான கட்டணம் ரூ.90 கழிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது அலைபேசிக்கு மெசேஜ் வந்துள்ளது.தன் கார் ஸ்ரீவில்லிபுத்துாரில் வீட்டில் இருக்கும் நிலையில் கேரள மாநிலத்தில் டோல்கேட் கட்டணம் கழிந்துள்ளது குறித்து அதிர்ச்சி அடைந்தார். தன்னுடைய பாஸ்டேக் கணக்கை வேறு யாரேனும் பயன்படுத்துகின்றனரா என குழப்பம் அடைந்துள்ளார். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆன்லைன் மூலம் போலீசில் புகார் அளிக்க உள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ