உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 500 மெகா வாட் சூரியசக்தி மின்சாரம் வாங்க அனுமதி

500 மெகா வாட் சூரியசக்தி மின்சாரம் வாங்க அனுமதி

சென்னை:மின் தேவையை பூர்த்தி செய்வதில் சூரியசக்தியை உள்ளடக்கிய, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் பங்கை அதிகரிக்குமாறு, மாநில மின் வாரியங்களுக்கு, மத்திய மின் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழக மின் வாரியம், சூரியசக்தி மின்சாரத்தை அதிகம் கொள்முதல் செய்கிறது.மத்திய அரசின், 'சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' நிறுவனத்திடம் இருந்து, 500 மெகா வாட் சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் அனுமதி கேட்டது.இந்த மனுவை பரிசீலித்த ஆணையம், 25 ஆண்டுகளுக்கு, ஒரு யூனிட், 2.72 ரூபாய்க்கு 200 மெகா வாட்; யூனிட், 2.73 ரூபாய்க்கு 300 மெகா வாட் வாங்க அனுமதி அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி