உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் தேர்வில் இரு வகையான வினாத்தாள்கள் பாதிக்கப்பட்ட மாணவர் கலெக்டரிடம் மனு

நீட் தேர்வில் இரு வகையான வினாத்தாள்கள் பாதிக்கப்பட்ட மாணவர் கலெக்டரிடம் மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி : நாடு முழுதும் மே 5ல் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடந்தது. துாத்துக்குடி மாவட்டத்தில் அழகர் பப்ளிக் பள்ளி, ஆறுமுகநேரி சாகுபுரம் கமலாவதி பள்ளி மையங்களில் இரு வகையான வினாத்தாள் வழங்கப்பட்டது. சிலருக்கு கியூஆர், எஸ்.டி., என்ற கியூஆர் கோடுகளுடன் 28 பக்கங்கள் கொண்ட வினாத்தாளும், சிலருக்கு எம், என், ஓ, பி, என்ற கியூஆர் கோடுகளுடன் 32 பக்கங்கள் கொண்ட வினாத்தாளும் வழங்கப்பட்டன.தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டு தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் குறைந்துள்ளது. இந்நிலையில், துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பெற்றோருடன் நேற்று முற்றுகையிட்டனர்.

கலெக்டரிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:

ஒரே தேர்வுக்கு இரண்டு வகையான வினாத்தாள் வழங்கப்பட்டது தொடர்பாக இதுவரை எவ்வித விளக்கமும் தேசிய தேர்வு முகமை அளிக்கவில்லை. மாறுபட்ட வினாத்தாள் வழங்கியவர்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ளதால் மருத்துவப் படிப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.எம், என், ஓ, பி, என்ற கியூஆர் கோடுகளுடன் வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் தேர்வு முகமை இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட வேண்டும்.பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு தனி 'கட் - ஆப்' மற்றும் கவுன்சிலிங் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

வாசகர்
ஜூன் 11, 2024 16:16

வினாத்தாளிள் நிர்வாகத்திற்காக சில குறியீடுகள் இருக்கலாம். மற்றபடி அது சுத்தமான வெள்ளைத் தாள், அச்சு செய்யப்பட்ட குறியீடுகள் எதுவாக இருந்தால் என்ன, நமது விடையை சரியாக எழுதினால் போதும். மதிப்பெண் குறைவு என்றால் வினத்தாளை திரும்ப பெற்று சோதனை செய்து கொள்ளும் வசதி உள்ளது. பிறகு எதற்கு இது போன்ற நிகழ்வுகள்?


Barakat Ali
ஜூன் 11, 2024 14:19

பிராம்மணர்கள் உள்ளிட்ட மேட்டுக்குடி மக்களுக்காகவே கொண்டு வரப்பட்டது நீட் என்று தற்போது கூறும் திமுக அடிமைகள் அதைக் கொண்டு வந்த காங்கிரஸ், அது நிறைவேற ஆதரவு தெரிவித்த திமுகவை எதிர்த்து கேள்வி கேட்பதில்லையே ????


Svs Yaadum oore
ஜூன் 11, 2024 11:59

சென்ற வாரம் நடந்த TNPSC குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட்டில் முகவரி தவறாக பதிவு செய்யாததால் தேர்வு எழுத முடியாமல் போனதாக பலர் பரிதவிப்பு .... 5 பேரு ஹால் டிக்கெட்டை கிழிச்சி போட்டுட்டாங்க... 50 பேருக்கு மேல ஏமாந்து திரும்பி போய்ட்டாங்க என்று வேதனை தமிழ் நாட்டில் ஒரு சாதாரண சர்வீஸ் கமிஷன் தேர்வு கூட சரியாக நடத்த இந்த விடியலுக்கு முடியவில்லை ...ஆனால் நீட் நீட் என்று மத்திய அரசை குறை சொல்ல மட்டும் இனிக்கும் ...


ram
ஜூன் 11, 2024 11:29

என்னமோ பிளஸ் டூ முடித்தவர்கள் அனைவரும் டாக்டர் ஆக போற மாதிரி


Sampath Kumar
ஜூன் 11, 2024 10:51

வெக்கமே இல்லாமல் சப்போர்ட் பண்ணுறானுக


Anbuselvan
ஜூன் 11, 2024 10:18

மற்றும் வேறு வேறு செட் வினாத்தாள்கள் இருந்தாலும் வினாக்கள் மாறி மாறி இருக்குமே தவிர மாறாது. அதன்படி பார்த்தால் சில பக்கங்கள் அதிக வினாக்களை உள்ளடக்க வாய்ப்பு வலுவாக உள்ளது. மக்களை திசை திருப்பும் முயற்சியை கை விட வேண்டும். இது பத்திரிகைகளின் மற்றும் இதர ஊடகவங்களும் நடு நிலை வகித்து மக்களிடம் போய் சேர்க்க வேண்டும். நீட் வேண்டுமா வேண்டாமா என்பது வேறு விஷயம். ஆனால் இந்த விஷயத்தில் இது நீதி படி செல்லும். நீதி மன்றத்திற்கு சென்றால் வழக்கையே எடுத்து கொள்ள மாட்டார்கள் என்பதை நினைவு கொள்ள வேண்டும்.


Anbuselvan
ஜூன் 11, 2024 10:12

நீட் தேர்வு விதிப்படி 6 குறியீட்டை கொண்ட 24 தேர்வு வினாத்தாள்கள் இருக்கும். எதையோ கூறி மக்களை நடுவன் அரசுக்கு எதிராக திசை திருப்புவது அரசியல் நாகரிகம் இல்லை பொது பொறுப்பும் இல்லை. மக்களிடம் இந்த மீடியா நடுநிலையுடன் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.


S. Narayanan
ஜூன் 11, 2024 08:54

Affected students should get justice


R.RAMACHANDRAN
ஜூன் 11, 2024 08:37

முற்பட்ட வகுப்பினரின் நன்மைக்காக தேர்வுமேல் தேர்வு வைத்து தாழ்த்தப்பட்ட மக்களை ஓரம் கட்டுகின்றனர். மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களை சேர்த்து அவர்கள் திறன்மிக்கவர்களாக ஆக்கி உயர் கல்வியில் தேர்ச்சி பெறவில்லை எனில் வீட்டுக்கு அனுப்புவதை விட்டுவிட்டு நுழைவு தேர்வு வைத்து ஓரம் கட்டுகின்றனர் தாழ்த்தப்பட்டவர்களை.


Shekar
ஜூன் 11, 2024 09:16

முற்பட்ட வகுப்பில் ஏழைகள் இல்லையா, எந்த வசதியும் இல்லாமல் அவர்கள் முன்னேறவில்லையா?, எல்லோருக்கும் அதே இரண்டு கை, கால், காது, ஒரு மூளை என்றுதானே உள்ளது. நம்மைத்தான் அடங்கமறு, அத்துமீறுன்னு சொல்லி வளர்குறானுக, அப்புறம் எப்படி படிப்பது.


raj
ஜூன் 11, 2024 10:17

என்ன ஒரு அறிவு எப்படி இருந்தாலும் இட ஒதிக்கீடு அவர் அவர்களுக்கு தான் கிடைக்கும்


GMM
ஜூன் 11, 2024 08:11

ஒரே தேர்வு. இருவகை வினா தாள். பாதிக்கப்பட்டு துன்புறும் மாணவர்கள் மறு வாய்ப்பு பெற வேண்டும். இது நிர்வாக கோளாறு? நீதி, நிர்வாக தவறு தண்டனைக்கு உட்படுவது இல்லை. நீட் நீக்க பல வழிகள் செயற்கையாக உருவாக்க படுகின்றன. தனியார் மருத்துவ கல்லூரிகள் திராவிட, வழக்கறிஞர்கள் ஆதரவு இருப்பதால் எப்படியும் நீதிமன்றத்தில் போராடி நீக்கி விடும்? அலோபதி மருத்துவ வியாபாரம் மிக பெரியது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை