உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பித்ரகுண்டா, ஜோலார்பேட்டை காட்பாடி ரயில்கள் ரத்து

பித்ரகுண்டா, ஜோலார்பேட்டை காட்பாடி ரயில்கள் ரத்து

சென்னை:ரயில் பாதை, நடைமேம்பால பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் - பித்ரகுண்டா, ஜோலார்பேட்டை ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆந்திர மாநிலம் விஜயவாடா கோட்டத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்க உள்ளதால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆந்திரா மாநிலம் பித்ரகுண்டா - சென்னை சென்ட்ரல் அதிகாலை 4:55 மணி ரயில், வரும் 29, 30, மே 1, 2, 3, 6, 7, 8, 10, 13, 14, 15, 16, 17, 20, 21, 22, 23, 24ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறதுசென்ட்ரல் - பித்ரகுண்டா மாலை 4:30 மணி ரயில், வரும் 29, 30, மே 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 13, 14, 15, 16, 17, 20, 21, 22, 23, 24ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது பச்சகுப்பம் ரயில்வே யார்டில் புதிய நடைமேம்பாலம் பணி நடக்க உள்ளதால், ஜோலார்பேட்டை - காட்பாடி பகல் 12:45 மணி ரயில் மற்றும் காட்பாடி - ஜோலார்பேட்டை காலை 9:30 மணி ரயில் இன்று ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள்

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கொச்சுவேலியில் இருந்து, மே 4, 11, 18, 25, ஜூன் 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் அதிகாலை 1:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த 3வது நாளில் பாருணி செல்லும்பாருணியில் இருந்து, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25ம் தேதிகளில் மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த 3வது நாளில் இரவு 8:45 மணிக்கு கொச்சுவேலிக்கு செல்லும்.இந்த சிறப்பு ரயில்கள், கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை பெரம்பூர் வழியாக இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை