உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு வாரம்

பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு வாரம்

சட்டசபையில் நேற்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்புகள்: வாழ்விட பாதுகாப்பு, அன்னிய தாவரங்கள் ஆக்கிரமிப்பு அகற்றம், கடற்கரைகளை துாய்மைப்படுத்துதல், வன உயிரின கணக்கெடுப்பு, பிளாஸ்டிக் கழிவு அகற்றம், கடல் ஆமைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்தும் வகையில், 2 கோடி ரூபாய் செலவில், தமிழக பசுமை கரங்கள் திட்டம் செயல்படுத்தப்படும் மனிதர்கள், விலங்குகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு, காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கு 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாள்தோறும் நலவாழ்வு திட்டம் செயல்படுத்தப்படும் மாசு கட்டுப்பாட்டு வாரிய நிதியில் இருந்து, 100 பள்ளிகளில் பசுமை பள்ளிக்கூட திட்டம் செயல்படுத்தப்படும் சென்னை பெருங்குடி, புதுக்கோட்டை திருக்கட்டளை ஆகிய இடங்களில் உள்ள திடக்கழிவு குப்பை கிடங்குககளில் 4 கோடி ரூபாய் செலவில், வெப்ப புகைப்பட கருவி மற்றும் விஷ வாயு கண்டறியும் சென்சார்கள் நிறுவப்படும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து, ஒவ்வொரு மாதமும் ஒரு வாரம் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படும். அவற்றை மறு சுழற்சி செய்தல் அல்லது சிமென்ட் தொழிற்சாலைகளில் எரிபொருளாக பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

சொந்த பயன்பாட்டை குறைக்க நவீன பஸ்கள்

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்புகள்: தனி நபர்களின் வாகன பயன்பாட்டை குறைக்கும் வகையில், குளிர்சாதன வசதி, 'வைபை, ஜி.பி.எஸ்.,' கண்காணிப்பு கேமரா, அவசர கால பொத்தான்கள் மற்றும் சொகுசு இருக்கை உள்ளிட்ட வசதிகள் கொண்ட உயர் ரக பஸ்கள் இயக்குவது குறித்து ஆய்வு செய்யப்படும் உலக வங்கி நிதி உதவியுடன், சென்னையில் கூடுதலாக 500 மின்சார பஸ்கள் இயக்கப்படும் அரசு பஸ்களில், கணினிமயமாக்கப்பட்ட பார்சல் மற்றும் சரக்குகள் அனுப்புதல் சேவை அறிமுகம் செய்யப்படும் குளிர்சாதன வசதி இல்லாத அனைத்து நகர பஸ்களிலும் விருப்பம் போல பயணம் செய்யும் வகையில் மாதாந்திர பயணச்சீட்டு வழங்கப்படும்வாகன முன்பதிவு எண்கள் இனி ஆன்லைன் முறையில் ஏலம் விடப்படும் மாநில சாலை பாதுகாப்பு கொள்கைக்கு மாற்றாக, தற்போதைய சவால்கள், தேவை கருதி புதிய விரிவான சாலை பாதுகாப்பு கொள்கை வெளியிடப்படும் சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்கள், மரணமடைந்தவர்களின் சட்டபூர்வ வாரிசுகளுக்கு, முதல்வரின் விபத்து நிவாரண நிதி வழங்க, மொபைல் போன் செயலி உருவாக்கப்படும்.

பழங்குடியினருக்கு 4,500 வீடுகள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி வெளியிட்ட அறிவிப்புகள்: சிவகங்கை, ஈரோடு, கடலுார், விருதுநகர் மாவட்டங்களில், 15 கோடி ரூபாயில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு, புதிய விடுதிகள் கட்டப்படும் பள்ளி, கல்லுாரி விடுதிகளில், 10 கோடி ரூபாயில், திறன் சார்ந்த பட்டறைகள், போட்டிகள் மற்றும் பயிற்சிகள் நடத்தப்படும் உயர் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு 'உயர் திறன் ஊக்கத் திட்டம்' 41 லட்சம் ரூபாயில் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர், விவசாய நிலம் வாங்க, நிலத்தின் மதிப்பில் 50 சதவீதம் அல்லது 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்க 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் வன உரிமை சட்டத்தை விரைவாக செயல்படுத்த, 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் திருப்பூர் மாவட்டம் முதலிப்பாளையம், ஈரோடு மாவட்டம் ஈங்கூரில் உள்ள தொழிற்பேட்டை அலகுகள், 50 கோடி ரூபாயில் புனரமைக்கப்படும் வீடற்ற பழங்குடியினருக்கு, ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து, 4,500 வீடுகள் கட்டி தரப்படும். இதற்காக 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் குடியிருப்புகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்வியல் விழா, 3 கோடி ரூபாயில் நடத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை