உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 45 மணி நேர தியானம்: மனதில் தோன்றிய சிந்தனைகளை பகிர்ந்த பிரதமர் மோடி

45 மணி நேர தியானம்: மனதில் தோன்றிய சிந்தனைகளை பகிர்ந்த பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கன்னியாகுமரியில் 45 மணி நேரம் தியானத்தில் இருந்த போது மனதில் தோன்றிய சிந்தனைகளை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சீர்திருத்தம் தொடர்பான நமது பாரம்பரிய சிந்தனைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். சீர்திருத்தத்தின் திசையை நோக்கி வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நாம் முன்னேறி செல்ல வேண்டும். தேர்தல் தீவிரம் என் உள்ளத்திலும், மனதிலும் எதிரொலிப்பது இயல்பு. பொதுக்கூட்டத்திலும், சாலை பேரணியிலும் பார்த்த பல முகங்கள் என் கண் முன்னே வந்து சென்றது.

அரசியல் விவாதங்கள்

பெண் சக்தியின் ஆசீர்வாதங்கள், நம்பிக்கை, பாசம், இவை அனைத்தும் மிகவும் நெகிழ்ச்சியான அனுபமாக இருந்தது. நான் ஒரு தியான நிலைக்குள் நுழைந்தேன். என் கண்கள் ஈரமாகிக் கொண்டிருந்தன. சூடான அரசியல் விவாதங்கள், தாக்குதல்கள், எதிர் தாக்குதல்கள், குற்றச்சாட்டுகள் போன்ற தேர்தல் குணாதிசயங்கள் அனைத்தும் வெற்றிடத்தில் மறைந்து போயின. என் மனம் வெளி உலகத்திலிருந்து முற்றிலும் விலகியது. பாரதத்திற்கு சேவை செய்யவும், நமது நாட்டின் சிறப்பை நோக்கிய பயணத்தில் நமது பங்கை நிறைவேற்றவும் கடவுள் நம்மை தேர்ந்தெடுத்துள்ளார்.

ஒவ்வொரு நொடியிலும்...!

பாரதத்தில் கடவுள் நமக்கு பிறக்க அருளியதை நினைத்து ஒவ்வொரு நொடியிலும் நாம் பெருமை கொள்ள வேண்டும். ஒரு தேசமாக காலாவதியான சிந்தனை மற்றும் நம்பிக்கைகளை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தொழில்முறை அவ நம்பிக்கையாளர்களின் அழுத்தத்திலிருந்து நமது சமூகத்தை விடுவிக்க வேண்டும்.

வளர்ச்சிப் பாதை

21ம் நூற்றாண்டில் உலகம் பல நம்பிக்கைகளுடன் பாரதத்தை எதிர்நோக்கி பார்க்கிறது. பாரதத்தின் வளர்ச்சிப் பாதை நம்மை பெருமைப்பட வைக்கிறது. அதே நேரத்தில், 140 கோடி குடிமக்களுக்கும் தனது இலக்குகளை நோக்கி முன்னேற வேண்டும். நாம் புதிய கனவுகளை காண வேண்டும். அவற்றை நிஜமாக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

venugopal s
ஜூன் 03, 2024 23:52

நான் கூட பயந்து கொண்டே இருந்தேன், எங்கே இவர் தியானம் முடித்து வெளியே வரும்போது நான் தான் விவேகானந்தர் என்று சொல்லி விடுவாரோ என்று. நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை!


கோகுல், மதுரை
ஜூன் 03, 2024 20:21

அப்பப்பப்பா!!! இந்த அளவு ஒரு தனிநபரின் மீது, கட்சி என்பதை தாண்டி, இவ்வளவு வெறுப்பலைகள் உமிழ்ந்து நான் பார்த்தில்லை. நல்ல வேளை தேர்தல் முடிந்தது. இவர் என்ன தவறு செய்தார்? இவர் மேல் ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி? முதல் முறை ஆட்சி வந்தவுடன் தனது அற்புதமான வெளியுறவு கொள்கையினால் இந்தியாவில் 3 மாதம் ஒரு முறை குண்டு வெடிக்கும் கலாச்சாரம் நிறுத்தப்பட்டது. அது தவறா? இந்தியாவின் பாதுகாப்பிற்காக ரஃபேல், S400 வாங்கினார். இன்று வரை பல ஏவுகணை திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து விரைவுபடுத்துகிறார். அது தவறா? அயல் நாட்டில் நம் பணம் கள்ளநோட்டாக அச்சிடுவதை தடுக்கவும் பொருளாதாரத்தை முறைப்படுத்துவும் பணமதிப்பிழக்கம் செய்தார். அது தவறா? பொருளாதாரத்தை வலுப்படுத்த மற்றும் வரி வருவாயை கூட்ட, முறைப்படுத்த GST அமல்படுத்தினார். அது தவறா? காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணைக்க 370 நீக்கினார். அது தவறா? இந்தியாவை ஒருங்கிணைந்த சர்தார் வல்லபாய் படேலுக்கு நன்றி செலுத்தும் விதமாக சிலை அமைத்தார். அது தவறா? இஸ்லாமிய பெண்களுக்கு அநீதி இழைப்பதை தடுக்க முத்தலாக்கை நீக்கினார். அது தவறா? வெளிநாட்டில் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்படும் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கவும், கள்ளத்தனமாக குடியேறுபவர்களை முறைப்படுத்த CAA அமல்படுத்தினார். அது தவறா? பெரும்பான்மை மக்களின் பல நூற்றாண்டு கோரிக்கையை இஸ்லாமிய மக்களின் சம்மதத்துடன் இராமருக்கு அயோத்தியில் கோயில் எழுப்பினார். அது தவறா? ஊழலுக்கும், பிரிவினைவாதத்திற்கும் எதிராக இவரின் குரல் என்றுமே ஓங்கி ஒலித்து கொண்டுள்ளது. அது தவறா? ஹஹஹ அக வாழ்க்கையில் முன்னேற்றமடைய வாலை கன்னியை நினைத்து தியானிப்பது தவறா? எது தவறு?.... இவரை விமர்சிப்பவர்கள் தங்கள் வீட்டு கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்க்கவும். அதில் படிந்துள்ள கறை உங்களுக்கு தெரியும்.


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 05, 2024 03:27

அருமையாக சொன்னீர்கள், ஆனால் திருத்து திராவிட கழிசடைகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு, போதை மயக்கத்தில் இருக்கும் மேதாவி ஹிந்துக்களுக்கு புரியாது.


Easwar Kamal
ஜூன் 03, 2024 17:32

ஒரு நாட்டின் தலைவன் என்றல் மக்கலோடு இருக்க வேண்டுமா ஒழிய இப்படி மதம் சார்ந்து இருக்க கூடாது. அப்படி மதத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு இருந்தால் மக்கள் பணியை விடுத்து துறவறம் போகலாம். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை இது எப்படி ஓத்து போகும். மக்கள் பணியே மஹாசேன் பனி என்று இருந்தால் குமரிக்கு வந்து இருக்க மாடீர்கள்.


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 05, 2024 03:24

உங்களை போன்ற ஹிந்துக்கள் தான் நாட்டிற்கு கேடு


venugopal s
ஜூன் 03, 2024 17:03

அப்போது அவர் தியானமே பண்ணவில்லையா?தியானம் என்பதே மனதை ஒரு நிலைப்படுத்தி வேறு சிந்தனைகள் எதுவும் இல்லாமல் இருப்பது என்று கேள்விப் பட்டுள்ளேன்!


ஆதிரா
ஜூன் 03, 2024 16:54

அதானி அம்பானி காங்கிரசுக்கு எவ்ளோ குடுத்தாங்க? தியானத்திலே தெரிஞ்சுதா?


என்றும் இந்தியன்
ஜூன் 03, 2024 17:39

ரூ 35,000 கோடி equivalent டாலரில் கொடுத்திருக்கின்றார்கள் எனது தியானம் சொல்கின்றது


Lion Drsekar
ஜூன் 03, 2024 15:31

உலகத்துக்கு அறிவித்த விஞ்ஞானிகளின் பெயர் ஒன்றுகூட யாருமே வேண்டுமே பயன்படுத்துவதே கிடையாது . காரணம் நாசா சொல்வதுதான் பேசும்பொருளாகிவிட்டது . அன்று மன்னர்கள் பலர் தனி மனித ஒழுக்கத்தோடு வாழ்ந்தார்கள், அதனால்தான் சான்றோர்கள் மன்னன் எவ்வழியோ அவ்வழியே மக்களும் என்கிறார்கள், சரித்திரத்தில் படித்த சான்றோர்கள், நல்லவர்கள் பெயர்கள் எல்லாமே முழுவதுமாக நீக்கப்பட்டுவிட்டது . ஆனால் இப்படியும் வாழ்ந்திருக்கிறார்கள் என்று வாழ்ந்து காட்டும் சிலரில் ஒருவர் நமது பிரதமர் . வாயே திறக்காமல் அமைதியாக இருந்தார் ஆனால் ஒன்றா ஊர் முழுவதும் திரும்பும் இடமெல்லாம், அவரவர்களுக்கென்ற ஊடங்களில் பேசும் பேச்சு காது கொடுத்து கேட்கமுடியாத அளவுக்கு இருக்கிறது . நல்லவர்களை வேரோடு அழித்த பெருமை நமக்குத்தான் சேரும் கர்மவீரரை பற்றி பேசாத பேச்சா ? தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் , தாயாரைப்பற்றி, குடும்பத்தைப்பற்றி, வாழ்க்கைமுறையைப்பற்றி எதையுமே விட்டுவைக்கவில்லை . அதே போன்று நேருவைப்பற்றி , இந்திரா காந்தியைப்பற்றி, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவுக்கு பேசி, இன்று தேர்தலில் அவர்களுடன் கூட்டு . இதனால் பயன் யாருக்கு ? மக்களுக்கா நாட்டுக்கா ? இதை யாருமே உணர்ந்த்ததாக தெரியவில்லை . மாறாக ஒரு கையில் வெள்ளைக்கார துரையின் பெண்ணைக்கையில் பிடித்துக்கொண்டு , புகைத்துக்கொண்டு வாழ்ந்தவர்களைக் கொண்டாடுகிறோம் . எப்படி எல்லாம் வாழக்கூடாதோ படியெல்லாம் வாழ்ந்த , வாழ்ந்துவரும் சிலரை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறோம் . இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒரு நாள் வழிகாட்டியாக ஒருவர் முன்வந்து நடந்து கட்டுவது இன்று தவறு . வந்தே மாதரம்


Ramesh.M
ஜூன் 03, 2024 13:51

ஹலோ


Swaminathan Nath
ஜூன் 03, 2024 13:35

இந்தியாவிற்கு கிடைத்த பொக்கிஷம் மோடிஜி, அவர் நீண்ட நாள் ஆரோக்கியமுடன் இருக்க வேண்டும், லஞ்சம், பிரிவிநைவாதம் , ஜாதி வேறுபாடு கலவரம் உண்டாகும் சராசரி அரசியல் வாதிகள் , இவரை பார்த்து திருந்த வேண்டும்,


Rajah
ஜூன் 03, 2024 13:02

பல பெண்களை, வயது முதிர்ந்த பெண்களை, சிறுமிகளை இவர் திருமணம் செய்யவில்லை. நாட்டை கொள்ளை அடிக்கவில்லை. தமிழ் நாட்டில் வாழும் ஆசியாவின் பணக்காரரும் இல்லை. பஞ்சம் பிழைக்க வந்த மாநிலத்தையே கொள்ளை அடித்தவரும் இல்லை. நடைமுறை வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப் பிடிக்கின்றார். இப்படிப்பட்ட ஒருவரை நாம் பிரதமராக அடைந்ததற்கு நாம் பாக்கியசாலிகள்.


Swaminathan L
ஜூன் 03, 2024 12:03

நம் தேசம் சிக்காகிவிட்ட நூல்கண்டு போல இருக்கிறது தற்போது. சமூக, பொருளாதார வேறுபாடுகள், அவற்றை சாதி, மத பிளவுகளால் பூதாகாரமாக்க முயலும் ஓட்டு வங்கி அரசியல்வாதிகள், பிழைத்திருப்பதே வாழ்வின் நோக்கமென வைத்திருக்கும் பல கோடி விளிம்புநிலை மனிதர்கள், காசு சேரும் காரணத்தினாலேயே பொறுப்புகளற்ற வெறும் நுகர்வோர்களென மாறிவரும் நடுத்தர, மேல்தட்டு வர்க்கங்கள்.. இத்தனைக்கும் இடையில் உலகரங்கில் இரு கால்களில் தானே உறுதியாக நிற்க முயலும் நம் தேசம்.. நாளை மறுநாள் அமையப் போகும் மத்திய அரசு கூடுதல் பொறுப்பு, அக்கறை, கவனம் மற்றும் அர்ப்பணிப்போடு சிக்குகளை நீக்கி நூல்கண்டை நல்உபயோகத்திற்கு ஏதுவாக காப்பாற்ற வேண்டும். தர்மம் துணை நிற்கட்டும்.


மேலும் செய்திகள்