உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கார் வேண்டாம்... இனி பஸ், வேன் தான்! கட்சி நிர்வாகிகளுக்கு ராமதாஸ் கறார் ஆர்டர்

கார் வேண்டாம்... இனி பஸ், வேன் தான்! கட்சி நிர்வாகிகளுக்கு ராமதாஸ் கறார் ஆர்டர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சி நடத்தும் எந்த நிகழ்ச்சி என்றாலும் கார்களில் வரக்கூடாது என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள் கவனத்திற்கு என்ற தலைப்பிட்டு ராமதாஸ் பதிவு ஒன்றை தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.அந்த பதிவில் கூறி உள்ளதாவது; பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அதில் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கார்களில் வந்து பங்கேற்கக் கூடாது. நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் பெண்கள் உள்ளிட்ட பா.ம.க.,வினரை பஸ்கள், வேன்களில் அழைத்துக் கொண்டு அவர்களுடன் ஒன்றாக பயணித்து வரவேண்டும். இனி வரும் காலங்களில் இந்த அறிவுறுத்தலை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறி இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ஆரூர் ரங்
நவ 11, 2024 15:10

இவர் நடைபயணமாக வருவார். அப்படித்தானே?


sankar
நவ 11, 2024 09:12

வரவர கூட்டம் மட்டும் இல்லை - கோரமே இல்லை - சோ வாட் டு டூ


PARTHASARATHI J S
நவ 11, 2024 08:39

எதற்கு மாநாடு ? முடிந்தால் ஆன்லைனில் மாநாடு நடத்தலாமே ! தீர்மானங்கள் ஈமெயிலில்.


விவசாயி
நவ 11, 2024 08:02

ஆமாம் கண்டிப்பாக பின்பற்றனும், ஆனா nanka? மட்டும்தான் கார்ல வரணும்


N.Purushothaman
நவ 11, 2024 07:21

தமிழகத்தில் அரசியல் செய்வதற்கு நிறைய பணம் செலவாகிறது ...இந்நிலை மாறாவிட்டால் லஞ்சம் ஊழலை ஒழிப்பது இயலாத காரியமாகிடும் ... எளிமை என்பது தற்போது அறவே இல்லாமல் போய் விட்டது ...


Amruta Putran
நவ 11, 2024 06:32

Good policy for all political parties to follow


Mani . V
நவ 11, 2024 05:43

இது உங்க குடும்ப உறுப்பினர்களுக்குப் பொருந்தாதுதானே டாக்டர் ஐயா? ஏனென்றால், கட்சிக்காரர்களை படிக்காதே, பேருந்து, ரயிலில் கல் ஏறி, குடிசைக்கு தீ வை என்று சொல்லிவிட்டு, உங்கள் குடும்ப உறுப்பினர்களை மட்டும் நன்கு படிக்க வைத்து,..... என்னமோ போங்கள் ஐயா.


Kasimani Baskaran
நவ 11, 2024 04:55

பெட்டி வரவில்லை என்றால் இப்படித்தான் கட்சி நடத்தவேண்டும். அனைத்துக்கட்சிகளும் இது போல ஆடம்பரமில்லாமல் நடந்து கொண்டால் அதிக செலவாகாது.


Anantharaman Srinivasan
நவ 10, 2024 22:34

நானும் பிள்ளையும் மட்டும் தனித்தனி கார்களில் வருவோம். நீங்களால்லாம் பஸ் அல்லது லாரிளில் வாருங்கள். அப்பொழுது தான் ரோடுகள் அடைபட்டு traffic jam ஆகும். கூட்டம் குறைவாகயிருந்தாலும் அதிகம்போல் தெரியும். இது எழுதப்படாத உத்தரவு.


plksupporter
நவ 10, 2024 22:19

Cheating family business and make use of caste for their control over party to gain power/fame/money. first anbumani and his wife not to contest then they are relevant


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை