உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்கள் நல்ல தீர்ப்பு தருவர் பிரேமலதா எதிர்பார்ப்பு

மக்கள் நல்ல தீர்ப்பு தருவர் பிரேமலதா எதிர்பார்ப்பு

சென்னை:அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்காக உழைத்த கட்சியினருக்கு, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா நன்றி தெரிவித்துஉள்ளார்.இது குறித்து பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கை:லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - தே.மு.தி.க., மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற வாழ்த்துகள். களத்தில் உழைத்த அனைவ ருக்கும் நன்றி. ஜனநாயக ரீதியாக நம் கடமையை, நேர்மையுடன் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி உள்ளோம். ஓட்டளித்த அனைத்து மக்களுக்கும் நன்றி. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற வகையில், மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவர் என்று நம்புவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்