உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பி.எஸ்.என்.எல்., ப்ரீபெய்ட் 395 நாட்கள் பயன்படுத்தலாம்

பி.எஸ்.என்.எல்., ப்ரீபெய்ட் 395 நாட்கள் பயன்படுத்தலாம்

சென்னை:பி.எஸ்.என்.எல்., 'ப்ரீபெய்ட்' வாடிக்கையாளர்கள் 2,399 ரூபாய்க்கு,' ரீசார்ஜ்' செய்தால், 395 நாட்களுக்கு அளவில்லா கால்கள் மற்றும் தினமும், 2 ஜி.பி., டேட்டாவை பயன்படுத்த முடியும். பி.எஸ்.என்.எல்., நிறுவனம், தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு இணையான சேவைகளை வழங்கி வருகிறது. 'ப்ரீபெய்ட்,போஸ்ட்பெய்ட், பாரத் பைபர், பிராட்பேண்ட்' என, பல சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது. குறிப்பாக தனியார் டெலிகாம் நிறுவனங்களை காட்டிலும், பி.எஸ்.என்.எல்., ரீசார்ஜ் திட்டத்தின் கட்டணம் குறைவு.அந்த வகையில், பி.எஸ்.என்.எல்., ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் 2,399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 395 நாட்களுக்கு அளவில்லா கால்கள், தினமும், 2ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ.எம்.எஸ்., வசதிதளை பெற முடியும். தவிர, பி.எஸ்.என்.எல்., 'டியூன்ஸ், ஜிங்மியூசிக்' உள்ளிட்ட பல வசதிகளையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை