உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழிவுபடுத்துகிறார் ராகுல்; மத்திய அமைச்சர்கள் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழிவுபடுத்துகிறார் ராகுல்; மத்திய அமைச்சர்கள் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : 'தன் பொறுப்பற்ற பேச்சின் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்., - எம்.பி., ராகுல் இழிவுபடுத்துகிறார்' என மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், “அக்னிபாத் திட்டம், அயோத்தியில் வளர்ச்சிப் பணிகளுக்கு நிலம் அளித்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் தொடர்பான விஷயங்களில் ராகுல், பொய் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியுள்ளார். சொன்ன குற்றச்சாட்டுகளை ராகுல் நிரூபிக்க வேண்டும்; இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறான குற்றச்சாட்டுகளை கூறி அவர் தப்பிக்க முடியாது,” என்றார். “முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பா.ஜ., தலைவர்கள் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் போன்றோர் எதிர்க்கட்சித் தலைவர்களாக செயல்படும் போது, பொறுப்பாக இருந்து சபையை வழி நடத்தினர். ஆனால், எந்த பொறுப்புமின்றி அதிகாரத்தை மட்டுமே ராகுல் அனுபவித்து வருகிறார். தன் பொறுப்பற்ற பேச்சின் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அவர் இழிவுபடுத்துகிறார். அவரின் காங்கிரஸ் கட்சி, அரசியலமைப்பு அமைப்புகளை தொடர்ந்து பலவீனப்படுத்தி வருகிறது,” என, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விமர்சித்துள்ளார். ராகுலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர்கள் பலர், இந்த விவகாரத்தில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வலியுறுத்த உள்ளதாக கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

முருகன்
ஜூலை 02, 2024 11:26

அதற்கு ஜால்ரா அடிக்க முடியாது அல்லவா மக்கள் மனதில் உள்ளதை பேசுவது தான் எதிர்க்கட்சிகள் வேலை


Dharmavaan
ஜூலை 02, 2024 10:03

ராகுல் பேசுவது ஊசியால் குத்துவது போல் உள்ளது. பிஜேபி பதில் மென்மையாக உள்ளது. இந்த கேவலத்திடம் நாகரீகம் பார்க்க கூடாது பதில் ஈட்டியால் குத்துவது போல் இருக்க வேண்டும்


M Ramachandran
ஜூலை 02, 2024 09:59

தகுதி அற்ற அவரை தேர்ந்தேடுத்த மக்கள் தலை குனிய வேண்டும்.


duruvasar
ஜூலை 02, 2024 08:35

பாத்திரம் அறிந்து பிச்சை போடாத அறிவீலிகள்தான் இதற்க்கு காரணம்.


RAJ
ஜூலை 02, 2024 08:11

தகுதி, தராதரம் இல்லாத ஒருவருக்கு ஒரு மேலான பதவி கிடைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் இவர். .. கோவில்ல கொண்டு போய் ஒரு அழுக்கு மனிதனை நிறுத்தியது போல்...


raju
ஜூலை 02, 2024 09:23

உண்மையை பேசுவதற்ககு பிஜேபியில் சேரும் தகுதி என்ன? மோடி அளவுக்கு யாரும் பொய் பேசமுடியாது


அரசு
ஜூலை 02, 2024 08:11

தனிப் பெரும்பான்மை பெற முடியாத பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள் இன்னும் கூட மதத்தின் பெயரால் அரசியல் செய்வது அசிங்கம்.


சுராகோ
ஜூலை 02, 2024 09:23

பா ஜா கா செய்யவில்லை செய்தது ராகுல்


சுராகோ
ஜூலை 02, 2024 09:25

நேற்று அவரோட எண்ணம் வெளிப்பட்டிருக்கு. மக்கள் ஹிந்துக்கள் எல்லாம் கலவரம் பண்ண வேண்டும் என்ற எண்ணம்.


Dharmavaan
ஜூலை 02, 2024 10:04

ஜால்றா போடும் பச்சோந்திகள் பேசக்கூடாது


ganapathy
ஜூலை 02, 2024 10:10

முட்டாள்தனமான கருத்தை மதத்தை வச்சு எழுதக்கூடாது


ஆரூர் ரங்
ஜூலை 02, 2024 10:35

காங்கிரஸ் கடைசியாக எப்போ தனிப்பெரும்பான்மை பெற்றது? 40 ஆண்டுகளுக்கு முன்பு. ஆக பதவிக்காக காய்ந்து கிடக்கிறார்கள்.


Indian
ஜூலை 02, 2024 08:00

ராகுல் எதிர்கட்சிக்கு பெருமை


சந்திரசேகர்
ஜூலை 02, 2024 07:08

மத்தியில் ஒரு விளையாட்டு பிள்ளை மாநிலத்தில் ஒரு விளையாட்டு பிள்ளை. பரம்பரை அதிகாரம். அப்படித்தான் பேசுவார்கள்


Senthoora
ஜூலை 02, 2024 07:45

குறைகளை சொல்லிக்காட்டி கேள்வி கேட்டால், இழிவுபடுத்துகிறார்கள் என்று சொல்லி நழுவக்கூடாது, பதில் சொல்லணும், இது குடும்ப சண்டையிலும் இருக்கு, ஆனால் அரசியலில் தேவை இல்லை.


raju
ஜூலை 02, 2024 09:27

நான் கடவுளின் பிள்ளை - அம்மா இறந்து பிறகு தமிழ் நாட்டை சேர்ந்த பாண்டியன் திருடன் - தமிழ் நாடு தேர்தல் முடிந்த பிறகு முஸ்லிம்கள் தேச விரோதிகள் - கேரளா தேர்தல் முடிந்த பிறகு இன்னும் பல இதுதான் பிராடு


Svs Yaadum oore
ஜூலை 02, 2024 06:48

இந்த காங்கிரஸ் மற்றும் விடியல் , மேற்கு வங்க மேடம் என இந்த கூட்டம் மொத்தமும் சிறுபான்மை ஆதரவு ...இங்குள்ள மக்களை மதம் மாற்றி பங்களாதேஷி ரோஹிங்கயா என்று இவர்களை இங்கு குடியேற்றி இந்த நாட்டை சீரழிக்கணும் .....இவனுங்க மக்கள் பிரச்சனை பற்றி பேச மாட்டார்கள் .... பொய் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவானுங்க ....ஹிந்து பயங்கரவாதி தீவிரவாதி என்று பேசுவானுங்க ....அப்படி பேசுவதும் நல்லது ....அவனுங்க முகமூடி கீழியட்டும் ....


Indian
ஜூலை 02, 2024 06:27

பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது யாரு என்று மக்களுக்கு தெரியும். அதான் தமிழகத்தில் உங்களுக்கு பெரிய முட்டை கிடைத்ததே. அது தான் விரைவில் இந்தியா முழுவதும் கிடைக்கும் ..


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை