உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கத்திரி வெயில் இன்று துவக்கம்

கத்திரி வெயில் இன்று துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் காலம் இன்று துவங்குகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w4yjs8ht&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு, ஓரிரு இடங்களில் மணிக்கு, 40 கி.மீ., வேகம் வரை பலத்த காற்று வீசுவதுடன், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்துார் மற்றும் வேலுார் மாவட்டங்களில், வரும் 7ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகத்தில் சில மாவட்டங்களில், 44 டிகிரி செல்ஷியஸ் வரையிலும், சில மாவட்டங்களில், 40 டிகிரி செல்ஷியஸ் வரையிலும் வெயில் பதிவாகும். கடலோரம் அல்லாத வட மாவட்டங்களில், சில இடங்களில் வெப்ப அலை வீசும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி:சென்னை போன்ற கடலோர மாவட்டங்களில், மற்ற மாவட்டங்களைவிட வெப்பநிலை குறைவாக பதிவாகிறது. ஆனால், வளி மண்டலத்தில் வெப்பத்துடன் கூடிய ஈரப்பதம் இருப்பதால், உஷ்ணமாக, புழுக்கமாக காணப்பட்டு, அசவுகரியமாக இருக்கும்.கடலோரத்தில் கடற்காற்றும் தரைக்காற்றும் இணைந்து, வெப்ப அளவை தீர்மானிக்கின்றன. கடலோரம் அல்லாத மாவட்டங்களில், நிலப்பகுதியில் மண்ணின் வெப்பம், அந்த பகுதியின் வெப்பமாக தீர்மானிக்கப்படும்.அதேபோல, மலைப் பகுதிகளில், முற்பகலில் பாறைகள், மலைகள் வெப்பத்தை உள்வாங்கி, மாலை நேரங்களில் அது நிலப்பகுதியில் பரவுவதால், இரவு வரையிலும் வெப்பமான சூழல் நிலவுகிறது.கோடை வெயிலின் போது, வெவ்வேறு திசைகளில் காற்று வீசி, அது சந்திக்கும் இடங்களில், மேகக்கூட்டங்கள் உருவாக வாய்ப்பிருந்தால், அந்த பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

20 இடங்களில் வெயில் சதம்

நேற்று மாலை நிலவரப்படி, தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்சமாக, ஈரோட்டில், 43 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மொத்தம் 20 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது.சென்னை நுங்கம்பாக்கம், காரைக்கால், புதுச்சேரி, 38; கடலுார், கோவை, நாகை, தஞ்சாவூர், 39; மீனம்பாக்கம், நாமக்கல், பாளையங்கோட்டை, தர்மபுரி, மதுரை விமான நிலையம், சேலம், 40; திருச்சி, மதுரை, 41; கரூர் பரமத்தி, திருப்பத்துார், திருத்தணி, வேலுார், 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.ஊட்டி, 24; கொடைக்கானல், 25; குன்னுார், 28; வால்பாறை, 30; பாம்பன், பரங்கிப்பேட்டை, கன்னியாகுமரி, தொண்டி, துாத்துக்குடி, 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

skv srinivasankrishnaveni
மே 04, 2024 15:36

மாசிலேந்து பொசிக்குதுவெயில் தங்கவேமுடியாமல் தவிக்கிறோம் அதிகமா யூஸ் பண்ணதுaசி செத்துப்போச்சு புதுசுக்கு ஆர்டெர்ப்பண்ணி காத்துக்கிடந்துவந்தது பொருத்தரது ஆள்கிடைக்காமல் அவதி இப்போதான் நாட்கள் முன்னர்வந்தாரு மெக்கானிக் கரெண்ட் இருக்கும்போது போட்டுக்குவோம் கரெண்ட் பில் எவ்ளோவருமோன்னும் வயத்தை கலக்குது இந்தாண்டு சூரியனுக்கு வெறிபிடிச்சாப்போல கொளுத்திட்டுருக்காங்க


தத்வமசி
மே 04, 2024 10:47

என்னது கத்திரி வெய்யில் இப்பத்தான் தொடங்குதா ? அப்ப இவ்வளவு நாளாக வெயில் அடித்தது வெறும் டிரையல் தானா ? கடவுளே சீனா மற்றும் வளைகுடா நாடுகள் இன்ன பிற நாடுகள் "மேகம் விதைத்தல்" என்கிற விதத்தில் வழக்கத்துக்கு மாறாக மழையை பெறுவதால் மற்ற நாடுகளில் பொழிய வேண்டிய மழை பொழியாமல் கடும் வெயில் மட்டுமே இருக்கிறது சூரியனை மறைத்து கடும் வெய்யிளை குறைக்கும் மேகங்கள் எங்கே சென்றன என்று பார்த்தால் அவை ஏற்கனவே உறிஞ்சப்பட்டு விட்டன இதனால் தேவையில்லாமல் இப்போது ஆசியா கண்டம் முழுவதுமாக கடுமையான வெயிலால் பாதிக்கப் படுகிறது முதலில் இதை தடுக்க வேண்டும் இல்லையென்றால் இதுவே நாடுகளிடையே சண்டை வரவும் காரணமாக அமையாலாம் அதனால் இயற்கைக்கு மாறான பல நிகழ்வுகளை நாம் எதிர் கொள்ள நேரிடும் இயற்க்கை தானாகவே பல விதங்களில் வெப்பத்தையும், குளிரையும் சரி செய்யும் ஆற்றல் படைத்தது தான் ஆனால் நாட்டை ஆளுபவர்களின் பேராசையால் உலகம் வெப்ப மயமாகிறது


இறைவி
மே 04, 2024 09:21

சுமார் ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் இருந்த கோடை வெப்பத்திற்கும் இன்று இருக்கும் வெப்பத்திற்கும் செல்சியஸ் அளவில் பெரிய மாறுதல் இல்லை. ஒன்றிரண்டு டிகிரி மாறுதல் இருக்கலாம். ஆனால் மக்கள் இவ்வளவு துன்பத்தை எதிர்நோக்க காரணம் மனிதர்களின் தவறுகளும் பேராசையுமே. வெப்பமானி நாற்பது செல்சியஸ் என்று கான்பிக்கும்போது நாம் ஐம்பதிரண்டு செல்சியஸ் வெப்பத்தை உணர்கிறோம். அத்தகைய வெப்பத் தாக்கத்தினால் வெப்பம் தாங்க முடியாமல் போகிறது. முன்பு, உதாரணத்திற்கு தஞ்சை மாவட்டத்தில் நிலத்தடி நீர் பத்து முதல் பதினைந்து அடிக்குள் இருந்தது. அதனால் பூமி சூரியனின் வெப்பத்தை அதிகம் உள் வாங்காது. அப்படியும் உள் வாங்கும் வெப்பமும் இரவில் குளிர்ந்து விடும். மேலும் மரங்கள் அதிகம் இருந்ததால் வெப்பப் புழுக்கம் கட்டுப் படுத்தப் பட்டிருந்தது. ஆனால் இன்றோ மனிதர்களின் பேராசையினால் ஆழ்குழாய் மூலம் நீர் எடுக்கப்பட்டு தஞ்சை மாவட்டத்திலேயே நிலத்தடி நீர் நூறு அடிக்கும் கீழ் சென்று விட்டது. தமிழகத்தின் மேற்கு வடக்கு மாவட்டங்களை பற்றி சொல்ல வேண்டியது இல்லை. அவைகள் ஐநூறு முதல் ஆயிரம் அடி வரை கீழே போய் விட்டது. தஞ்சை மண்ணில் முன்பு கோடை சமயத்தில் உளுந்து பயிறு மட்டுமே பயிரிடுவார்கள். அவைகளுக்கு நீர் அதிகம் தேவையில்லை. ஜூன் மாதம் குறுவை நெல் பயிரிடுவார்கள். இன்றோ சித்திரை கார் பருவம் என்று நீர் அதிகம் தேவைப்படும் நெல்லை ஏப்ரலில் விதையிட்டு நடவு செய்கிறார்கள். வெயில் அதிகம் இருக்கும் ஏப்ரல் மே மாதங்களில் நாள் முழுவதும் மின் மோட்டார்களை தொடர்ந்து இயக்கி வயல்களில் எப்போதும் நீர் நிற்கும்படி செய்கிறார்கள். இதனால், நிலத்தடி நீர் மிகவும் கீழே இறங்கி விட்டது. அது மட்டுமின்றி மின்சாரம் அதிகம் உபயோகப்படுத்தப் படுகிறது. இவை எல்லாவற்றிற்கும் மகுடமாக ஆறுகளில் மணல் கொள்ளை நடந்ததன் பலன், ஆறுகளில் களிமண் தரை தெரிகிறது. நாணல், காட்டு ஆமணக்கு, கருவை புதர் மண்டி கிடக்கிறது. மணல் இல்லாததனால் பெய்யும் மழையும் தண்ணீர் பூமிக்குள் செல்ல வழியின்றி ஓடி விடுகிறது. அறுபதுகளில் கோடை காலத்தில் ஆற்றில் தோண்டினால் இரண்டு அடியில் நீர் ஊறும். இன்று ஆற்றில் பத்து அடி தோண்டினாலும் நீர் கிடைப்பதில்லை. அதுவன்றி தமிழ் நாட்டின் சிறிதும் பெரியதுமான குளங்கள், கண்மாய்கள், ஏரிகள், மனிதர்களின் ஆக்கிரமிப்பு போக மீதம் உள்ளவைகள் பெரும் பகுதி தூர்ந்து போய் கொள்ளளவு குறைந்து மழை காலத்தில் நீர் சேர்ந்து நிலத்திற்குள் ஊடுருவ வழியின்றி போயிற்று. இதே நிலைமை நீடித்தால் தமிழகமும் தென் ஆப்ரிக்கா போல நீரில்லாத நிலமாக மாறக் கூடும். அரசும் மக்களும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் செயல் பட வேண்டிய நேரமிது.


skv srinivasankrishnaveni
மே 04, 2024 15:43

வாடகை வீட்டுலே ரெண்டு இத்தொண்டிபோறாங்க ஒநேர்ஸ் கடனைவங்கியொரு வீட்டை வாங்குறாங்க ஐடி கம்பெனிகளில் வேலைபார்க்கும் நபர்கள் எவ்ளோ வாடகைநாலு வீடுபிடிச்சுண்டு கூட்டாக வாழுங்க தப்பே இல்லீங்க அவாளும் நிம்மதியா வேலைக்குபோகணும் சமைக்கணும் வாய்ருஇருக்கே அவா சம்பலம் நம்பியே தான் குடும்பங்களிருக்கு சிலர் டாம்பிகாமா இருப்பதால் எல்லோரையும் குற்றம் சொல்லமுடியாது பில்டர்ஸ்கள் தான் முக்கிய குற்றவாளிகள் இவாளுக்கு சப்போர்ட் அரசியல் வியாதிகள் என்ற பிராடுகள் ஏரிகள் குளங்கள் எல்லாம் காணாமல்போயாச்சு எவனாச்சும் கண்டுக்கிறானா கோவை போண்டா ஊருக்குள்ளே தோப்புகளெல்லாம் முதியோர் இல்லங்களா


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை