உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை ராமநாதபுரம் வரும் ராஜ்நாத் சிங்: அரிச்சல் முனையில் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்பு

நாளை ராமநாதபுரம் வரும் ராஜ்நாத் சிங்: அரிச்சல் முனையில் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்பு

ராமநாதபுரம்: நாளை (ஜூன் 20) ராமநாதபுரம் வரும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை மறுநாள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ல் பின்பற்றப்படுகிறது. அன்றைய தினம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அந்த வகையில், நாளை மறுநாள் (ஜூன் 21) ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனையில், காலை 6 மணியளவில், யோகா தின நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். நாளை மாலை ராமநாதபுரத்திற்கு தனி ஹெலிகாப்டரில் வரும் ராஜ்நாத் சிங், மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்துகிறார். பின்னர், உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்திற்கு சென்று ஆய்வு நடத்துகிறார். தனுஷ்கோடி அரிச்சல் முனையில், காலை 6 மணிக்கு நடைபெறும் கடலோர காவல் படை, விமானப்படை, கடற்படை, மெரைன் போலீசாரின் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் கலெக்டர், எஸ்.பி.,க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தம்பு
ஜூன் 19, 2024 21:31

வெட்டி செலவு


P. SRINIVASALU
ஜூன் 19, 2024 11:38

நீங்க குட்டிக்கரணம் அடிச்சாலும் தமிழ்நாட்டிலே தாமரைவளராது.


N Sasikumar Yadhav
ஜூன் 19, 2024 12:51

நீங்க ஓசியும் இலவசமும் வாங்கிக்கொண்டு ஊழல்வாதிகளுக்கு ஓட்டுப்போடுங்கள் வரிகட்டுபவர்கள் என்றாவது ஒருநாளைக்கு போராட்டம் செய்வார்கள் அப்போது இருக்கிறது ஓசியும் இலவசமும் கொடுத்து ஓட்டுவாங்கும் திராவிட கட்சிகளுக்கு


Svs Yaadum oore
ஜூன் 19, 2024 11:33

ராமேஸ்வரத்திற்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லையாம் .. இந்த விடியல் மதம் மாற்றி திராவிடனுங்க ராமேஸ்வரத்திற்கு எதை செய்ய வேண்டுமானாலும் அதற்கு விடியல் மத சார்பின்மையாக முட்டுக்கட்டை போடும் .... ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை, 18 கி.மீ., துாரத்திற்கு புது ரயில் பாதை அமைக்க, மத்திய அரசு முடிவு .... இத்திட்டத்துக்கு பிரதமர் மோடி, 2019 இல் அடிக்கல் நாட்டினார். மொத்தம் 733 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட திட்டம் . ஆனால் விடியல் அரசு கடலோர சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும், ரயில் போக்குவரத்துக்கான தேவையும் அதிகளவில் இல்லை என்றும், இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ...ஐந்து ஆண்டுகளாக விடியல் அரசால் இந்த திட்டம் முடக்கம் ..ஆனால் விடியல் எதற்கு இந்த திட்டம் வருவதை தடுக்கிறது என்பது மக்கள் அறிந்ததே ...


தஞ்சை மன்னர்
ஜூன் 19, 2024 10:33

நன்மை பயக்கும் நலன் திட்டங்களை ஏதும் கொண்டு வரமாட்டார்கள்


kumarkv
ஜூன் 19, 2024 12:33

சரி உன் வீட்டுக்கு ரயிலை போடுவோம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை