உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் ஊழியர்கள் போராட்டம் சம்பளம் பிடிக்க உத்தரவு

ரேஷன் ஊழியர்கள் போராட்டம் சம்பளம் பிடிக்க உத்தரவு

சென்னை: வேலைக்கு வராமல் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ரேஷன் ஊழியர்களுக்கு, 'வேலையில்லை சம்பளம் இல்லை' விதியின் கீழ் சம்பளம் பிடித்தம் செய்யுமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் விற்பனையாளர், எடையாளர் பதவிகளில், 25,000த்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் நடக்கும் முறைகேடை தடுக்க, அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது பொருட்களின் இருப்பு, பதிவேட்டில் இருப்பதை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்; அந்த அபராத தொகை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதை திரும்ப பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க ஊழியர்கள், நேற்று சென்னை உட்பட பல மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, வேலைக்கு வராமல் போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்களுக்கு, 'வேலையில்லை சம்பளம் இல்லை' விதியின் கீழ் சம்பளம் பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் உத்தரவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ