வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மினிமம் ஊழலே 100 கோடி ரேஞ்சுக்கு அமோக வளர்ச்சி பிகாரில். அவிங்க சப்போர்ட்ல ஒன்றிய அரசு. சூப்பர் மாடல்.
சென்னை:ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களிடம் இருந்து, லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதாகி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட சுங்கத்துறை அதிகாரி மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சென்னை மந்தைவெளியில் வசிப்பவர் சந்தீப்குமார் சவுராசியா. இந்திய விமானப் படையின் முன்னாள் ராணுவ வீரான இவர், சுங்கத் துறையில் ஏற்றுமதி, இறக்குமதி பொருட்கள் மதிப்பீட்டாளராக, சென்னை துறைமுகத்தில் பணியாற்றி வந்தார். ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களிடம் இருந்து, 100 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கியதாக, இவர் மீது புகார் எழுந்தது. இதுகுறித்து, டி.ஆர்.ஐ., எனப்படும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், 2024, மே மாதம், அவரை கைது செய்தனர். இதையடுத்து, சந்தீப்குமார் சவுராசியா, ஓராண்டுக்கு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இவர், லஞ்சப் பணத்தில் பீஹார் மாநிலம், பாட்னாவில் அதிகமாக சொத்து வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், சந்தீப்குமார் சவுராசியா மீது, பாட்னா சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணையில், இவர் வருமானத்திற்கு அதிகமாக, 78.81 சதவீதம் அளவுக்கு சொத்து வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அது தொடர்பான வழக்கிலும் சந்தீப்குமார் சவுராசியாவை கைது செய்ய உள்ளனர்.
மினிமம் ஊழலே 100 கோடி ரேஞ்சுக்கு அமோக வளர்ச்சி பிகாரில். அவிங்க சப்போர்ட்ல ஒன்றிய அரசு. சூப்பர் மாடல்.