உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பின்னணியில் ஆளுங்கட்சி கும்பல்

பின்னணியில் ஆளுங்கட்சி கும்பல்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியதாவது:இந்த ஆட்சியில் கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியில் போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம், கலெக்டர் மற்றும் எஸ்.பி., உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் உள்ள பகுதியிலேயே சாராய விற்பனை நடந்துள்ளது. இச்சம்பவத்திற்கு பின், ஆளுங்கட்சி கும்பல் உள்ளது.விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். அப்போது, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அதிகார பலமிக்கவரின் ஆதரவோடு தான் சாராய விற்பனை நடந்தது. தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக திகழ்கிறது. கள்ளச்சாரயம் ஆறுபோல ஓடுகிறது. சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்காக சென்னையில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்து உயர்தர சிகிச்சை அளித்திருந்தால் பலரை காப்பாற்றி இருக்கலாம். மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு.சாராயம் அருந்தியதால் தான் இறந்ததாக பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால், வயிற்றுப் போக்கு, வயது மூப்பு, வலிப்பு ஏற்பட்டு இறந்ததாக கலெக்டர் நேற்று முன்தினம் தெரிவிக்கிறார். அரசுக்கு முட்டு கொடுக்கும், இப்படிப்பட்ட அதிகாரிகள் இருக்கும் போது, ஏழை மக்களுக்கு எங்கே நீதி கிடைக்கும்? மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தேவையான அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. மருத்துவ கருவிகள் இல்லை. குறிப்பாக, சாராய விஷத்தை முறிக்கும் மருந்து தமிழகத்தில் எந்த மருத்துவமனைகளிலும் இல்லை.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி இறந்துள்ளனர். பெற்றோரை இழந்து வாடும் அவரது மூன்று குழந்தைகளின் கல்வி செலவை அ.தி.மு.க., ஏற்கும். அவர்களுக்கு அடுத்த, 10 ஆண்டுகளுக்கு மாதந்தோறும், 5,000 ரூபாய் வழங்கும். சாராயம் குடித்து உயிரிழந்த நபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 10 லட்சத்தை உயர்த்தி, 25 லட்சமாக வழங்குவதுடன், தகுதி வாய்ந்த நபர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூன் 21, 2024 10:50

சாராயம் குடிச்சு செத்தவனுக்கு மக்கள் பணமா? ஏண் நீங்களெல்லாம் என்ன தைரியத்தில் இதை சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. உங்களையெல்லாம் தலைவர்களாகவும் முதல்வர்களாகவும் பெற்றதற்கு தமிழக மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? உங்க சுயநலனுக்காக ஏண் மக்களை பலியாக்குறீங்க? துட்டுக்கு ஓட்டுப்போடும் மக்கள் இருக்கிறவரையில் இந்த திருடர்களின் ஆட்டம் ஒழியாது.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 21, 2024 05:35

யார் வீட்டு காசை எடுத்து கொடுக்க போறீங்க தலைவர்களே ? கடைசியில் சாராயம் வித்தவன் கவுன்சிலர் ஆகி கார் வாங்கி அதன்மீது இரு கலர் கொடியை பறக்கவிட்டுக்கொண்டு சென்று விடுவான்


Thiruvengadam Ponnurangam
ஜூன் 21, 2024 05:24

உயிர் இழந்தவர்களின் குடுமப்த்தின் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. 10 லட்சம் 25 லட்சம் ஏன் ஏற்றி கொடு போகாமல் , இந்த மாதிரி விசா சாராயத்தை எப்படி முழுதாக ஒலித்துக்காட்டுவது என்று பார்க்க வேண்டும். நீங்களும் பொங்கலுக்கு இவளவு பணம் கொடுக்கலாம் என்று இன்றைய ஆளும் கட்சி நீங்க ஆளும் பொழுது பண்ண அரசியலை இங்க பண்ணாதீங்க. மக்கள் உங்களின் வியாபார பொருள் அல்ல. தயவு செய்து அரசியல் செய்யாமல் நீண்ட கால் தீர்வு என்ன.. லஞ்சம் வாங்கிட்டு சாராயம் விக்க அனுமதிக்கிறவன் எவன் ? தெரிந்தாலும் தெறியாத மாதிரி இருக்க நடிப்பு தான் இங்க நெருடுகிறது. மக்கள் சொன்னாலும் ஏற்று கொள்கிற பக்குவம் அரசுக்கு இல்லை, அதன் வருமானத்தையும் இழக்க தயாரில்லை


kumar
ஜூன் 21, 2024 05:04

உயிர் இழப்பு மிகுந்த வருத்தம் அளிப்பது தான் . ஆனால் புத்தி கேட்டு பொய் கள்ள சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதற்கு இழப்பீடு ? அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்ற சலுகைகள் ? அரசு பணியின் இடையே இறந்தாலோ , விபத்துக்கு உள்ளானாலோ தான் இது போன்ற சலுகைகள் தரப்பட வேண்டும் . பொருளாதார வசதி இல்லாமல் இருந்தாலும் கடினமாக படித்து மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று குறிக்கோளுடன் இருக்கும் எத்தனையோ மாணவர்களுக்கு இந்தமாதிரி பொருள் உதவி செய்தால் பயனுண்டு . அந்த மாணவர்களும் மதிப்பார்கள் . சாராயம் குடிப்பதை , விற்பதை ஆதரிக்காதது போலும் இருக்கும் .


மேலும் செய்திகள்









புதிய வீடியோ