மேலும் செய்திகள்
கரூர் சம்பவத்தில் 3 குற்றவாளிகள்
25 minutes ago
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
33 minutes ago
காலையில் குறைவு; மாலையில் உயர்வு
36 minutes ago
ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை
44 minutes ago
சென்னை:டெல்டா மாவட்டங்களில், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை, 78.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரசு செயல்படுத்தி வருகிறது. ஜூன் மாதம் மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்காததால், நிலத்தடி நீராதாரங்களை வைத்து சாகுபடி செய்த விவசாயிகள் மட்டுமே, இதில் பலன் பெற்று வருகின்றனர்.தற்போது, அணை திறக்கப்பட்டுள்ளதால், சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இதற்கு சம்பா சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வேளாண் துறை செயலர் அபூர்வா, இயக்குனர் முருகேஷ் ஆகியோர், இதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுஉள்ளனர். விவசாயிகளை திருப்திப்படுத்தும் வகையில், சம்பா சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவிக்க, அரசும் முடிவெடுத்து உள்ளது. குறுவை சாகுபடி காலம் இன்னும் முடியாததால், ஆக., இறுதியில் அறிவிக்க, அரசு திட்டமிடப்பட்டு உள்ளது.முன்கூட்டியே சம்பா சாகுபடி துவங்கினால், வடகிழக்கு பருவ மழையில் பயிர்கள் பாதிக்கும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
25 minutes ago
33 minutes ago
36 minutes ago
44 minutes ago