உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கண்மூடித்தனமாக வங்கி கணக்கை முடக்கும் அதிகாரிகளுக்கு கண்டிப்பு

கண்மூடித்தனமாக வங்கி கணக்கை முடக்கும் அதிகாரிகளுக்கு கண்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கண்மூடித்தனமாக அதிகாரத்தை பிரயோகித்து, வழக்கில் குற்றம் சாட்டப்படுபவர் வங்கி கணக்கை முடக்கும் போலீஸ் அதிகாரிகளை, சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

வழக்கு பதிவு

சென்னையை சேர்ந்த ஜெயசாம்ராஜ் என்பவர், ராமாபுரம் போலீசில் அளித்த புகார் அடிப்படையில், முகமது அபுசலிஹு என்பவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.அதைத்தொடர்ந்து, பெடரல் வங்கியில் உள்ள முகமதுவின் வங்கி கணக்கை, போலீசார் முடக்கி வைத்தனர். வங்கி கணக்கு முடக்கத்தை நீக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் முகமது மனுத் தாக்கல் செய்தார்.மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.பொன்முடி ஆஜராகி, “ஜெயசாம்ராஜுக்கும், முகமதுக்கும் இடையே பண பரிவர்த்தனை இருந்தது. பணத்தை திருப்பி தரவில்லை என்று முகமதுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். இது, நண்பர்களுக்கு இடையேயான சிவில் பரிவர்த்தனை. வங்கி கணக்கை முடக்கி வைக்க போலீசாருக்கு அதிகாரம் இல்லை,” என்றார்.

புலன் விசாரணை

மனுவை விசாரித்த, நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:புகாரை படிக்கும் போது, விசாரணைக்கு எடுக்கும் வகையிலான குற்றத்தை வெளிப்படுத்தவில்லை.இருந்தும், போலீசார் வழக்குப் பதிவு செய்து, புலன் விசாரணைக்கு எடுத்துள்ளனர். மனதை செலுத்தாமல், வங்கி கணக்கை முடக்கும்படி, புலனாய்வு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அதுகுறித்து, மனுதாரருக்கும் தெரியப்படுத்தவில்லை.மனுதாரரின் வங்கி கணக்கில் உள்ள தொகை, குற்றச்செயல் வாயிலாக வந்தது என்பதில் திருப்தி இல்லாத நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரின் வங்கி கணக்கை முடக்க, போலீசாருக்கு அதிகாரம் இல்லை. வங்கி கணக்கை முடக்கும் வகையில், கண்மூடித்தனமாக அதிகாரத்தை செயல்படுத்தும் போலீஸ் அதிகாரிகளின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.விசாரணை என்ற பெயரில், ஐந்து மாதங்களாக மனுதாரர் துன்பப்பட்டுள்ளார். எனவே, உடனடியாக முடக்கத்தை நீக்கும்படி, வங்கிக்கு, போலீஸ் அதிகாரி தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Thiruvengadam Ponnurangam
செப் 03, 2024 08:35

இப்படியே சொல்லி ஒருவரையும் வேலை செய்ய விடாதீங்க. வர தீர்ப்புக்கு எல்லாம் தடை, நிறுத்திவைத்து ... இப்படி பல.. இந்த மாதிரி போனா காவல்துருளையும் மற்ற துறைகளும் ஈதிமன்றத்துக்குக்கு முன்னாள் காய் கட்டி தினமும் நிற்கவேண்டும் .. என செய்யலாம் என்று மன்றம் சொல்லுபிம்படி செய்ய.. இப்பவே பல கோடி வழக்குகள் நிலுவையில் இழுத்துக்கிட்டு இருக்கு .. இதுல இந்தமாதிரி குழப்ப வேற.


GMM
செப் 03, 2024 06:57

பண பரிவர்த்தனை அதிகம் என்றால், போலீஸார் வருமான வரி துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். சிவில் தாவா என்றால், கலெக்டர் விசாரிக்க வேண்டும். மற்ற துறை உத்தரவை அமுல் படுத்த தான் போலீஸ். புகார் அடிப்படையில் தானே செயல்பட முடியாது. வங்கி கணக்கு முடக்க போலீசுக்கு எப்போதும் அதிகாரம் இல்லை. போலீஸ் போலி அதிகாரம் அரசியல்வாதிகள் பலன் பெற உதவி வருகிறது. ஒழுங்கு படுத்த தலைமை செயலாளர் முயற்சிக்க வேண்டும்.


VENKATASUBRAMANIAN
செப் 03, 2024 06:56

வங்கிகள் அதன் கொள்கையை கடைபிடிக்க வேண்டூம். இல்லையென்றால் யாருடைய வங்கி கணக்கை முடிக்கலாம் என்ற நடைமுறை வந்து விடும். போதிய ஆதாரங்கள் இல்லாமல் செய்ய கூடாது


சமூக நல விரும்பி
செப் 03, 2024 06:08

இருவரும் லஞ்சம் வாங்கி இருப்பார்கள்


Kasimani Baskaran
செப் 03, 2024 05:29

இதற்க்கு வங்கி எப்படி ஒத்துக்கொண்டது என்பதுதான் புரியாத புதிர். வங்கியிடம் பத்துக்கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குதொடர வேண்டும்.


M S RAGHUNATHAN
செப் 03, 2024 07:33

If there is a FIR, then the investigating officer has a right to freeze the account. The I.O. should be in the rank of Inspector.


புதிய வீடியோ