வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அதாவது இந்தப் பேய்களுக்கு அரசியல் பின்புலம் இல்லை ன்னு தெரியுது .... என்கவுன்ட்டர் கிடையாதா ????
மேலும் செய்திகள்
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
16-Jan-2025
கடலுார் : பாலியல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய 2 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் அடுத்த ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு,55; இவர், 2024ம் ஆண்டு அக்., மாதம் 17 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் சிதம்பரம் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதேப் போன்று, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் அன்பு (எ) அன்புகுமார், 30; சமூக வலைதளங்கள் மூலமாக கடலுாரைச் சேர்ந்த 17வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர். இவர் மீது கன்னியாகுமரி, விருதுநகர், சென்னை பகுதி பெண்களிடம் சமூகவலைதளங்கள் மூலம் பழகி நகை, பணம் ஏமாற்றியது தொடர்பான வழக்குகள் உள்ளது. இருவரின் தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரையை ஏற்று, பாபு, அன்புகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் கடலுார் மத்திய சிறையில் உள்ள இருவரிடமும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று வழங்கினர்.
அதாவது இந்தப் பேய்களுக்கு அரசியல் பின்புலம் இல்லை ன்னு தெரியுது .... என்கவுன்ட்டர் கிடையாதா ????
16-Jan-2025