மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
2 hour(s) ago | 10
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
7 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
9 hour(s) ago | 3
சென்னை: டி.என்.பி.எஸ்.சி., எனப்படும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி எஸ்.கே.பிரபாகர் பதவியேற்றார்.டி.என்.பி.எஸ்.சி., தலைவராக இருந்த பாலச்சந்திரன், 2022 ஜூனில் ஓய்வு பெற்றார். அதன்பின், டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினராக இருந்த முனியநாதன், பொறுப்பு தலைவராக செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற டி.ஜி.பி., சைலேந்திரபாபுவை, டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நியமிக்க, தமிழக அரசு பரிந்துரை செய்தது. அதை கவர்னர் நிராகரித்தார்.பதவியேற்பு
இரண்டு ஆண்டுகளாக, புதிய தலைவர் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த வாரம் வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரி எஸ்.கே.பிரபாகர், டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று(ஆகஸ்ட் 22) டி.என்.பி.எஸ்.சி., தலைவராக பதவியேற்றார். நடவடிக்கை
''தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை சிறப்பாக நடத்த பரிந்துரைகளை வரவேற்கிறோம்'' என எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.
2 hour(s) ago | 10
7 hour(s) ago | 1
9 hour(s) ago | 3