உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனுஷ்கோடியிலிருந்து கார்கிலுக்கு ராணுவ வீரர்கள் பைக் பயணம்

தனுஷ்கோடியிலிருந்து கார்கிலுக்கு ராணுவ வீரர்கள் பைக் பயணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமேஸ்வரம்:கார்கில் போர் வெற்றி 25வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தனுஷ்கோடி அரிச்சல்முனையிலிருந்து கார்கில் வரை 4000 கி.மீ., பைக் பயணத்தை ராணுவ வீரர்கள் நேற்று துவங்கினர்.லடாக் அருகே கார்கில் மலையில் ஊடுருவிய பாக்., ஆதரவு பயங்கரவாதிகளை 1999ல் மே 3 முதல் ஜூலை 26 வரை இந்திய ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை விரட்டியடித்து, வெற்றி கண்டனர். இதனை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு விழாவாக கொண்டாடுகிறது. 25ம் ஆண்டு கார்கில் வெற்றி தினத்தை போற்றும் விதமாக நேற்று ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் இருந்து கார்கில் வரை 4000 கி.மீ., துாரத்தை பயணிக்க 9 டூவீலர்களில் ராணுவ வீரர்கள் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.தென்னக ராணுவ தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஸ்ரீநிவாஸ் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ், காஷ்மீர் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா உடன் நடந்த போரில் வீரமரணமடைந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ராணுவவீரர் பழனியின் மனைவி வானதிதேவி பங்கேற்றனர். ராணுவ வீரர்கள் மதுரை, பெங்களூர், மகாராஷ்டிரா, இமாச்சலபிரதேசம், சர்சூ, நயோமா, லடாக் வழியாக ஜூலையில் கார்கில் செல்ல உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lion Drsekar
ஜூன் 13, 2024 13:55

வாழ்த்துக்கள் அதே நேரத்தில் இந்திய மக்கள் ஒருங்கிணைந்து அனைத்து ராணுவ வீரர்களையும் பாராட்டும் விதத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கொண்டாடி, மகிழ்வதுதான் சரியாக இருக்கும் . காரணம் தமிழகத்தில் இராணுவ வீரர்களுக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை . இன்றைக்கு ஒரு தமிழ் பத்திரிக்கையில் இந்திய இராணுவ தலைமை பொறுப்பேற்க இருக்கும் அவர்களின் புகைப்படம் மிக மிக சிறியதாக போடப்பட்டு அடுத்து பதவிக்கு வரப்போகிறார் என்று இருந்தது கண்டு வருத்தம் அடைகிறோம் . ஆனால் கொலை , கொள்ளை காரர்களின் புகைப்படங்கள் மற்றும் சினிமா காரர்களின் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் இருக்கிறது . எனவே போற்றுதலுக்குரிய மிகப்பெரிய புனிதமான இடத்தில பணியாற்றும் நமது எல்லைக்காவல் தெய்வங்களுக்கு நாம் அவர்கள் இருக்குமிடம் தேடி பாராட்டுவதே சிற்ந்ததாக இருக்கும், வாழ்க நமது இந்தியா வளர்க நமது ஒற்றுமை , வந்தே மாதரம்


Kasimani Baskaran
ஜூன் 13, 2024 06:57

வாழ்த்துகள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை