உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டூவீலர்கள் மோதலில் எஸ்.எஸ்.ஐ., பலி

டூவீலர்கள் மோதலில் எஸ்.எஸ்.ஐ., பலி

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மகனுடன் வேலைக்கு டூவீலரில் வந்த போது குறுக்கே மற்றொரு டூவீலரில் வந்தவர் மோதியதில் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., நடராஜன் 53, பலியானார்.வெம்பக்கோட்டை ஆலங்குளம் சங்கரமூர்த்தி பட்டியை சேர்ந்தவர் நடராஜன். தமிழக போலீசில் 1997 முதல் பேட்ச் ஆவார். மனைவி மகேஸ்வரி 44, மகள் கண்மணி 21, மகன் முகேஷ் 17, உடன் கீழ ராஜகுலராமன் போலீஸ் குடியிருப்பில் வசித்தார்.கீழ ராஜகுலராமன் ஸ்டேஷனில் இருந்து மாற்றலாகி ராஜபாளையம் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் குற்றப்பிரிவு எஸ்.எஸ்.ஐ., ஆக பிப். 28 ல் சேர்ந்தார்.3 மாதங்களுக்கு முன் விபத்தில் காயமடைந்து மருத்துவ விடுப்பில் இருந்து பணிக்கு வந்தார். தனியாக டூவீலர் ஓட்ட முடியாததால் நேற்று காலை 9:00 மணிக்கு சத்திரப்பட்டி- - ராஜபாளையம் ரோட்டில் மகனின் பின்னால் டூவீலரில் அமர்ந்து பணிக்கு வந்தார். சொக்கலிங்காபுரம் பஸ் ஸ்டாப் எதிரில் அதே பகுதி பெருமாள் 65, என்பவர் டூவீலரில் குறுக்கே வந்து மோதியதில் நடராஜன் துாக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்தவர் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். பெருமாள் லேசான காயமடைந்தார். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

.Dr.A.Joseph
ஜூன் 03, 2024 01:19

தென்னம் தோப்பில் வேலை செய்தாலும் தேங்காய் தலையில் விழுந்து ஒருவர் இறப்பது அரிது, பனை காடுகளில் வேலை செய்தாலும் பனம்பழம் தலையில் விழுந்து ஒருவர் இறப்பது அரிது. காவல்துறையினருக்கு மட்டும் அப்படியில்லை.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ