உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சிலை: அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சிலை: அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''சுதந்திர போராட்ட வீரமங்கை ராணி வேலு நாச்சியார் மற்றும் மருது சகோதரர்களுக்கு, தலா 50 லட்சம் ரூபாயில், திருஉருவச் சிலைகள் அமைக்கப்படும். அப்துல்கலாம் பிறந்த நாள், சென்னையில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்,'' என, அமைச்சர் சாமிநாதன் அறிவித்தார்.சட்டசபையில் செய்தித்துறை தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:சென்னை காந்தி மண்டப வளாகத்தில், வீரமங்கை ராணி வேலுநாச்சியார் உருவச்சிலை; சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு, தலா 50 லட்சம் ரூபாயில் உருவச்சிலை நிறுவப்படும்தமிழகத்தில் முதன் முதலில் அச்சு இயந்திரத்தை நிறுவி, தமிழுக்கு பெருமை சேர்த்த, ஜெர்மன் நாட்டை சேர்ந்த சீகன் பால்குவுக்கு, சிலையுடன் கூடிய மணிமண்டபம்; சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய, தொல்லியல் துறை தலைமை இயக்குனராக பணிபுரிந்த, சர் ஜான் ஹூபர்ட் மார்ஷலுக்கு, 50 லட்சம் ரூபாயில் உருவச்சிலை நிறுவப்படும்கோவையில் அறிவியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு; சென்னையில் இந்திரா காந்தி; திருத்தணியில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்; தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தியாகி நாடிமுத்துப்பிள்ளை; கரூரில் விவசாயிகள் நலனுக்கு பாடுபட்ட முத்துசாமி ஆகியோருக்கு, தலா 50 லட்சம் ரூபாயில் உருவச்சிலை அமைக்கப்படும்செங்கல்பட்டில் ஜூலை 7 இரட்டைமலை சீனிவாசன்; கடலுார் மாவட்டத்தில் ஜூன் 1 சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் பிறந்த நாள், ஆண்டுதோறும் அந்த மாவட்டத்தில் அரசு விழாவாக கொண்டாடப்படும்மதுரை மாவட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி, தங்கள் இன்னுயிரை ஈந்த, 16 வீரத்தியாகிகளுக்கு ஏப்., 3ல் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படும்ராமநாதபுரம் மாவட்டத்தில், அக்.,9ல் சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரனார்; நாமக்கல்லில், தை 1ல், அல்லாள இளைய நாயக்கர்; வேலுாரில் ஏப்., 13ல், சுதந்திரப் போராட்ட தியாகி அண்ணல் தங்கோ; சென்னையில், செப்., 11ல் முன்னாள் முதல்வர் சுப்பராயன்; அக்.,15ல் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்; புதுக்கோட்டையில், ஜூலை 7ல் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார்; திருச்சியில், மார்ச் 1 எம்.கே.தியாகராஜபாகவதர், ஜூன் 1ல், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்; ராணிப்பேட்டையில், ஏப்.,25 தமிழறிஞர் மு.வரதராசனார்; துாத்துக்குடியில், எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஆகியோர் பிறந்த நாள், அந்த மாவட்டத்தில், அரசு விழாவாக கொண்டாடப்படும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில், சென்னை அரசு மைய அச்சகத்திற்கு, 9 கோடி ரூபாயில் புதிய இயந்திரம் கொள்முதல் செய்வது உட்பட, பல்வேறு அறிவிப்புகளை, அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
ஜூன் 25, 2024 12:29

இன்னும் கொஞ்ச காலத்தில் சிலைகளுக்காகவும் மணிமண்டபங்களுக்காகவும் எல்லா மலைகளையும் காலி செய்து விடுவார்கள் போலிருக்கிறது. வள்ளுவர் சிலை வைக்க கூட டாஸ்மாக்கிலிருந்து நிதி பெறுவார்கள் போலிருக்கிறது.


தமிழ்வேள்
ஜூன் 25, 2024 12:11

ஒரு சிலைக்கு 50 லட்சம் எஸ்டிமேட் ...ஜூப்பர் ....உபிக்களுக்கு கல்லாக்கட்ட ஒரு நல்ல சான்ஸ் .....ஊருக்கு ஒரு சிலை மினிமம் ..பலே ..நல்ல வாய்ப்பு ..புகுந்து விளையாடுங்கள் ...


A
ஜூன் 25, 2024 09:00

Hiyyaaa...


Kasimani Baskaran
ஜூன் 25, 2024 05:10

திராவிடக்கடவுள்களுக்கு பல்லாயிரம் சிலைகள் செய்து விட்டு வாஞ்சிநாதன், பாரதியார், சிவா போன்ற உண்மையான போராட்ட வீரர்களுக்கு ஒன்றிரண்டு சிலைகள் செய்து விட்டு ஏதோ புனித காரியம் என்று உருட்டுவது ஏற்புடையதல்ல.


sankaranarayanan
ஜூன் 25, 2024 01:41

மாயாவதி அம்மையாரை பின் பற்றுங்கள் நாட்டில் முன்னேற்றத்திற்காக எவ்வளவோ செய்ய வேண்டிய தருணத்தில் இந்த அமைச்சரின் அறிவிப்பு மக்களுக்கு தேவையா என்று மக்களே சொல்ல வேண்டும் மூளைக்கு மூளை கருணாதி சிலை நிறுவப்பட்டுவருகின்றன கோயில்களிலுள்ள சிலைகளோ கானாமல் போகின்றன எதிர்க்கட்சிகள் யாருமே வாய் திறக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது இவருக்கு இனி செய்தித்துறை அமைச்சர் என்பதற்கு ன்பதில சிலைதுறை அமனுச்சர் என்றே கூறலாமே


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை