பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், மகா சுதர்சன ேஹாமம் நடந்தது.பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் சுதர்சன ஜெயந்தியையொட்டி நேற்று காலை, 6:00 மணிக்கு மூலவருக்கு அபிேஷக பூஜை நடந்தது.தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு மஹா சுதர்சன ேஹாமம், காலை, 11:30 மணிக்கு பூர்ணாஹுதி பூஜையும் நடந்தது. பின்னர் மஹா அபிேஷகம், கோவில் வளாகத்தில் சுவாமி உலா, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.* பொள்ளாச்சி எஸ்.எஸ்., கோவில் வீதி விஷ்ணு பஜனை கோவிலில் சுதர்சன ஜெயந்தியையொட்டி சுதர்சன ேஹாமம், பூர்ணாஹுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து காலை, 10:30 மணிக்கு மஹா அபிேஷகம், காலை, 11:30 மணிக்கு தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.* பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீ சுதர்சன ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து, சக்கரத்தாழ்வார் மூலவர் மற்றும் உற்சவருக்கு திவ்ய திருமஞ்சன அபிேஷகம் நடைபெற்றது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சுதர்சன ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.சக்கரத்தாழ்வார் ஜெயந்திஉடுமலை சுற்றுப்பகுதி பெருமாள் கோவில்களில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி சிறப்பு வழிபாடு மூன்று நாட்கள் நடந்தது. முதல் நாள் மாலையில் புன்யாகவாசனம், விஸ்வக்சேன ஆராதனம், அங்குர ேஹாமம், நடந்தது. நேற்று முன்தினம் காலையில் சிறப்பு ேஹாமம் நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு சுதர்சன ேஹாமம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு நவகலச விசேஷ திருமஞ்சனம் மற்றும் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது.* உடுமலை நெல்லுக்கடை வீதி சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் முதல் நாள் வாஸ்து சாந்தி, முதற்கால அக்னி பிரதிஷ்டை, முதல் ஆவர்த்தி ேஹாமம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மறுநாள் லட்சார்ச்சனை துவங்கியது, ஐந்து ஆவர்த்தி அர்ச்சனை, பூர்ணாஹுதி மாலையில் லட்சார்ச்சனை நிறைவு பெற்றது.சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலையில் விசேஷ மந்திர ேஹாமம், சுவாமிக்கு திருமஞ்சனம், அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமியின் வெள்ளி கவச அலங்கார சேவை நடந்தது.சக்கரத்தாழ்வார் ஜெயந்தியையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் திரளாக சென்று வழிபட்டனர்.-- நிருபர் குழு -