உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெப்பநிலை திடீர் சரிவு

வெப்பநிலை திடீர் சரிவு

 தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரமாகி உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், பருவமழை காற்றின் பரவலால், பெரும்பாலான இடங்களில் கோடை வெயிலின், அதிகபட்ச வெப்பநிலை ஒரே நாளில் குறைந்தது.மாநில அளவில் ஈரோட்டில் நேற்று, 40 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. சென்னை மீனம்பாக்கம், கரூர் பரமத்தி, வேலுார், 38 டிகிரி செல்ஷியஸ் என, 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி பதிவானது.கடந்த சில வாரங்களாக, 15க்கும் மேற்பட்ட இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவான நிலையில், நேற்று நான்கு இடங்களில் மட்டும், 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை