சென்னை:தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில், கட்டுமான திட்டங்கள் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அதன் விபரம்:
புதிய மனைப்பிரிவுகள் உருவாக்கம், மனைப்பிரிவில் உட்பிரிவுகள் உருவாக்கம் ஆகியவற்றுக்கு, 10.7 சதுர அடிக்கு, 5 ரூபாய் என்ற கட்டணத்தில் மாற்றம் இல்லை குடியிருப்பு கட்டடங்கள், 645 சதுர அடி வரையிலான திட்டங்களுக்கு, 10.7 சதுர அடிக்கு, 10 ரூபாயாகவும்; 645 சதுர அடிக்கு மேற்பட்ட திட்டங்களுக்கு, 10.7 சதுர அடிக்கு, 20 ரூபாயாகவும் இருந்த பதிவு கட்டணம், 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது வணிக கட்டடங்களுக்கு, 10.7 சதுர அடிக்கு, 50 ரூபாயாக இருந்த கட்டணம், 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது பிறவகை கட்டடங்களுக்கு, 10.7 சதுர அடிக்கு 25 ரூபாய் என்ற கட்டணத்தில் மாற்றம் இல்லை கட்டட பணி நிறைவு சான்று பெறும் நிலையில், தடையின்மை சான்று பெறுவதற்கு முன் தனியாக கட்டணம் விதிக்கப்படவில்லை. தற்போது ஒரு விண்ணப்பத்துக்கு, 2,000 ரூபாய் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது மனை வாங்குவோர் தனியாக விண்ணப்பித்தால், ஒரு மனைக்கு தடையின்மை சான்று வழங்க, 2,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது பதிவுக்கு பின் கட்டுமான திட்டத்தின் பெயர் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை மாற்றுவதற்கு, ஒவ்வொரு மாற்றத்துக்கும், 5,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட திட்டங்கள் குறித்த அசல் ஆவணங்களின் பிரதி பெற, புதிதாக 2,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது கட்டுமான திட்ட முடிவு சான்றிதழ் பெற, இதற்கு முன் தனியாக கட்டணம் அறிவிக்கப்படாத நிலையில், தற்போது, 5,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது ரியல் எஸ்டேட் ஆணையம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த, தனியாக ஆணை கோரி மனு செய்ய, 1,600 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது ரியல் எஸ்டேட் முகவர்களாக பதிவு செய்ய, தனிநபர்களுக்கு, 25,000 ரூபாயும்; நிறுவனங்களுக்கு, 50,000 ரூபாயும் கட்டணம் உள்ளது. இதில் புதுப்பிக்க, தனிநபர்களுக்கு, 5,000 ரூபாய், நிறுவனங்களுக்கு, 50,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது முகவர்கள் புதுப்பித்தலுக்கு காலதாமதமாக விண்ணப்பித்தால், தனிநபர்கள், 500 ரூபாய், நிறுவனங்கள், 5,000 ரூபாய் செலுத்த வேண்டும் ஒரு கட்டுமான திட்டத்தை பதிவு செய்த நிறுவனம், அதை திரும்பப் பெற விண்ணப்பித்தால், பதிவு கட்டணத்தில், 10 சதவீத தொகை பிடித்தம் செய்யப்படும் ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்த திட்டத்தில், குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகள் முடியாததால், கால அவகாச நீட்டிப்பு கோரி விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு பதிவு கட்டணத்தில், 10 முதல் 50 சதவீதம் வரையிலான தொகை வசூலிக்கப்படும். இவ்வாறு ஆணையம் கூறியுள்ளது.